சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற மருமகன் செய்த காரியம்.. "மாமியார்" வீட்டுக்கு அள்ளி சென்ற போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை.. ஆட்டோ உதிரி பாகங்கள் திருடி விற்ற 2 பேர் கைது-வீடியோ

    சென்னை: மாமியார் வீட்டு விருந்துக்கு சென்றபோது, அதே பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோவை திருடி விற்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 47 வயதாகிறது. ஆட்டோ டிரைவர்.

    Two person arrested for Auto Theft case in Chennai

    இவர் கடந்த 21ம் தேதி இரவு சவாரியை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்க போய்விட்டார். காலைல வந்து பார்த்தால், ஆட்டோவை காணோம்.

    அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் கள்ளச்சாவி மூலம் ஆட்டோவை திருடி செல்வது அதில் பதிவாகி இருந்தது தெரிந்தது.

    தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி

    அந்த உருவத்தை வைத்து, அவர் யார் என்று விசாரித்தபோது, சைதாப்பேட்டை பாரதிதாசன் குறுக்கு தெருவை சேர்ந்த 22 வயது முருகன் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது சொன்னதாவது: "என் மாமியார் வீடு திருவொற்றியூரில் இருக்கு. போன 21ம் தேதி என்னை மாமியார் வீட்டில் விருந்துக்கு கூப்பிட்டிருந்தாங்க. விருந்து முடிச்சிட்டு கிளம்பும்போதுதான் ராஜேந்திரன் ஆட்டோ என் கண்ணில் பட்டது.

    அதனால என் பிரண்ட் ராஜியை உதவிக்கு வெச்சிக்கிட்டு, ஆட்டோவை தனித்தனியாக பிரிச்சோம்.. அதை புதுப்பேட்டையில் கொண்டு போய் வித்துட்டோம். அந்த பணத்தில் 2 பேரும் தண்ணி அடிச்சி ஜாலியாக இருந்தோம்" என்றார். இதையடுத்து முருகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    English summary
    Two Youngsters have arrested by chennai Police for Auto Theft case and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X