அரக்கோணம் ஷாக்.. இரு வேறு கட்சியினர் கடும் மோதல்.. 2 இளைஞர்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கொலை.. பதற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரக்கோணம் அருகே புது மாப்பிள்ளை உட்பட 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    ராணிப்பேட்டை: புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் கொலை... குற்றவாளிகளுக்கு வலை!

    இருவேறு கட்சியினரிடையே இந்த மோதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அர்சுனன் ( 23), சூர்யா (21 ) திருமணமாகி 10 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை. இவர்களை தவிர மதன்(16) மற்றும் வல்லரசு (21) ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை 6 மணியளவில்அருகில் உள்ள குருவராஜப்பேட்டையில் கடை ஒன்றில் அமர்ந்து இருந்துள்ளனர்.

    வார்த்தை தடித்தது

    வார்த்தை தடித்தது

    அப்போது இவர்களுக்கும் பக்கத்து ஊரான பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவேறு கட்சிகளைச் சேர்ந்த இரு இந்த இரு கோஷ்டியினரும் மதுபோதையில் மோசமான வார்த்தைகளால் பேசி மோதிக் கொண்டனர்.

    கடும் மோதல்

    கடும் மோதல்

    இதையடுத்து, இந்த தகவல் பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர்களுக்கு பறந்துள்ளது. அங்கிருந்து சுமார் 20க்கும் மேற்பட்டோர், மோதல் ஏற்பட்ட பகுதிக்கு ஓடி வந்துள்ளனர். அவர்கள், அர்சுனன், சூர்யா, மதன் மற்றும் அந்த தரப்பைச் சேர்ந்த சௌந்தர் என்ற நால்வரையும் கத்தி, இரும்பு கம்பி, பாறாங்கல் ஆகியவற்றால் கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

    2 பேர் பலி

    2 பேர் பலி

    இச்சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த சோகனூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைபலனின்றி அர்சுனன் 21, சூர்யா 24 உயிரிழந்தனர். மற்ற இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    போலீஸ் எஸ்பி

    போலீஸ் எஸ்பி

    இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குபதிந்து கொலை குற்றவாளிகளை தேடிவருகின்றனர். மேலும், இச்சம்பவம் அரக்கோணம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பளர் சிவகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    தேர்தல் பிரச்சினையா?

    தேர்தல் பிரச்சினையா?

    இதனிடையே கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, சோகனூர் மக்கள் இரவு முழுவதும் சாலைமறியலில் ஈடுபட்டனர். எனவே அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள் தரப்பில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மது போதையில் இரு தரப்பும் இருந்தபோது, தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை முற்றி கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+