ஒருவனுக்கு 20 வயசு.. இன்னொருவனுக்கு 19.. மாணவியை சீரழித்து மிரட்டி.. அதிர வைக்கும் சென்னை சம்பவம்
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 2 கல்லூரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
சென்னை: "என்கூட இருந்தது மாதிரியே என் நண்பனிடமும் ஜாலியா இரு.. இல்லாட்டி..." என்று மாணவியை மிரட்டி கட்டாயப்படுத்திய இளைஞர் உட்பட 2 பேரை போலீசார் வாரி சுருட்டி கொண்டு போய் ஜெயிலில் அடைத்தனர்.
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். 20 வயதாகிறது. ஒரு என்ஜினியரிங் காலேஜில் 2-ம் ஆண்டு படிக்கிறார்.
அதே காலேஜில் படிக்கும் 17 வயது பெண்ணை லவ் பண்ணி வந்திருக்கிறார். மாணவியும் ஸ்ரீநாத்தை உயிருக்கு உயிராக விரும்பியதாக தெரிகிறது.

எல்லை மீறிய ஸ்ரீநாத்
இந்நிலையில், ஒருநாள் மாணவியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஸ்ரீநாத். அப்போது ரெண்டு பேருமே எல்லை மீறி நடந்து கொண்டுள்ளனர். இப்படி ஜாலியாக இருப்பதை தன் நண்பன் யோகேஷ் என்பவரை செல்போனில் மறைந்திருந்து வீடியோ எடுக்குமாறு ஸ்ரீநாத் சொல்லி இருக்கிறார். அதன்படியே அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்.

மிரட்டினர்
உடனே அந்த வீடியோவை காட்டி, யோகேஷிடமும் ஜாலியாக இருக்கும்படி ஸ்ரீநாத் மாணவியிடம் சொல்லி உள்ளார். அப்படி இல்லாவிட்டால், இணைய தளங்களில் வீடியோவை போட்டுவிடுவோம் என்று மிரட்டினர். இது போதாதென்று பணமும் கேட்டு மாணவியை தொந்தரவு செய்தனர்.

பெற்றோர் அதிர்ச்சி
ரெண்டு பேருமே ஜாலியாக இருக்கும்படி தன்னை கட்டாயப்படுத்தி மிரட்டுவதை கண்டு பயந்த மாணவி, வீட்டில் வந்து பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோரும் இது சம்பந்தமாக மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புழலில் அடைப்பு
அதன்பேரில் வழக்கை பதிவு செய்த போலீசார், ஸ்ரீநாத், யோகேஷ் ரெண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன் அள்ளிக் கொண்டு போய் புழல் ஜெயிலிலும் அடைத்தனர். 19, 20 வயசிலேயே சில இளைஞர்கள் இப்படி ஏமாத்தி கற்பழிப்பு, மிரட்டல், என இறங்கி விட்டார்களே என பள்ளிக்கரணை பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த வேதனையில் உள்ளனர்!












Click it and Unblock the Notifications