வந்தே பாரத்தில் இது புதுசு.. 160 கிமீ ஸ்பீடில் சரக்கு ரயில்கள்! சென்னை ஐசிஎப் தந்த அப்டேட்
சென்னை: பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை போலவே, விலை உயர்ந்த சரக்குகளை கையாள வந்தே பாரத் சரக்கு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பிற்கு ரயில்வே வாரியம் வழங்கியது. கடந்த ஓராண்டாக புதிய சரக்கு ரெயில் தயாரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த ரயில்கள் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயை நவீனமயப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில் நாடு முழுக்க அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயில்கள்
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 100 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயங்கி வருகின்றன. தமிழகத்திலும் சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.
விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் இயக்க ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களைப் பொறுத்தவரை தொலைதூர ரூட்களிலும் இரவு நேர பயணத்திற்காகவும் ஏற்றதாக இருக்கும் என்பதால், பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வந்தே பாரத் ரயில்களில் முழுவதும் ஏசி வசதி கொண்டது.
அதிவேகத்தில் செல்லும் திறன்
அதுபோக வைஃபை வசதி, ஆட்டோமெட்டிக் டோர், சொகுசான இருக்கைகள், தானியங்கி தீ அணைப்பு கருவிகள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இதனால் பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வழக்கமான எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களை விட வந்தே பாரத் ரயில்கள் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பதால் பயண இலக்கை விரைவாகவும் எட்டிவிடுகிறது.
தற்போது பயணிகளுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது போல, வந்தே பாரத் சரக்கு ரயில்களையும் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அழுகக்கூடிய பொருட்கள், இ-காமர்ஸ் சரக்குகளை கையாளும் நோக்கில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
370 டன் எடையை சுமந்து செல்லும்
இதன்படி வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எப்.-க்கு ரயில்வே வாரியம் வழங்கியது. கடந்த ஓராண்டாக புதிய சரக்கு ரயில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு வந்தே பாரத் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதன்பின் கூடுதலாக மற்றொரு ரயிலும் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, ஐ.சி.எப்.வில் 2 வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு ரயில் 16 பெட்டிகள் கொண்டது. சுமார் 370 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வந்தே பாரத் சரக்கு ரயில் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். தானியங்கி கதவு, கண்காணிப்பு கேமரா, முழுவதும் ஏசி வசதி, ஜிபிஎஸ் போன்ற வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய வந்தே பாரத் சரக்கு ரயில் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
85 சதவீத பணி முடிந்துவிட்டது
இதுகுறித்து, ஐ.சி.எப். அதிகாரிகள் கூறுகையில், 'ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் 2 வந்தே பாரத் சரக்கு ரயில்களின் பணி 85 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்டது. இந்த மாதம் இறுதியில் முழு பணிகள் முடிவடையும். டிசம்பர் முதல் வாரத்தில் ரயில்வே வாரியத்திடம் சரக்கு ரயில்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.
எந்த வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து ரயில்வே வாரியம் அறிவிக்கும்' என்று கூறினர். இன்னும் 15 சதவீத பணிகளே இருப்பதால், விரைவில் அந்த பணிகளும் முடிந்து அடுத்த ஆண்டு வந்தே பாரத் சரக்கு ரயில்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications