நள்ளிரவில் ஆட்டோவில் வந்து பைக்கை திருடும் வாலிபர்கள்... சிசிடிவி காட்சியால் பீதியில் சென்னை ஓஎம்ஆர்
Recommended Video
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் ஆட்டோவில் வந்து இருசக்கர வாகனத்தை இரண்டு வாலிபர்கள் திருடி செல்லும் சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கம் குமரன் குடில் 6வது குறுக்கு தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இளைஞர்கள் பலர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்த குடியிருப்பில் வசித்து வரும் ரஞ்சித் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 23ம் தேதி காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்வதற்காக கிளம்பிய ரஞ்சித் என்ற இளைஞர் குடியிருப்பின் கீழ் வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது ஆர்.ஒன்.பை என்ற இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஹெல்மெட் நபர்
பின்னர் எதிர் குடியிருப்பில் பாதுகாப்பிற்காக பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

ஆட்டோ நபர்
கடந்த 22ம் தேதி நள்ளிரவு சரியாக 1:48 மணியளவில் இருசக்கர வாகனம் திருடுபோன இடத்திற்கு ஒரு ஆட்டோவில் இரண்டு வாலிபர்கள் வந்துள்ளனர். ஆட்டோவில் இருந்து கையில் ஹெல்மெட்டுடன் இறங்கிய அந்த இளைஞர் சரியாக ஒரு மணி நேரத்தில் அதாவது 2:49 மணியளவில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இளைஞர் அதிர்ச்சி
குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட வந்த நபர்கள் எடுத்து வந்த ஆட்டோவில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்துள்ளது. தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆட்டோவில் நபர்கள் திருடி செல்லும் காட்சியை பார்த்த பாதிக்கப்பட்ட ரஞ்சித் அருகில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை கைபற்றி இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனம் வந்தது
கடந்த 5ம் தேதி மாலை 5 மணியளவில் அதே பகுதியில் பட்டப்பகலில் ஒரு வீட்டினுள் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு வாலிபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சியை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பியதால் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் இருசக்கர வாகனத்தை காரப்பாக்கம் பகுதியில் கொண்டு வந்து விட்டு சென்றனர். துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications