சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக முதல்வரின் முதன்மை செயலாளரானார் உதயச்சந்திரன்.. சாலச் சிறந்த தேர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    Who is T Udhayachandran? | Principal Secretary Of MK Stalin

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்று கொண்டார். இவர் பதவியேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

     ஜூன் 13க்கு பிறகு.. ஆரம்பமாகும் புதிய 'அரசியல் ஆட்டம்' - மு.க.ஸ்டாலின் தயாரா? ஜூன் 13க்கு பிறகு.. ஆரம்பமாகும் புதிய 'அரசியல் ஆட்டம்' - மு.க.ஸ்டாலின் தயாரா?

    இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனும், முதல்வரின் தனிச் செயலாளர்களாக உமா நாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

     திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே இந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதிலும் உதயசந்திரனின் பெயர்தான் இதில் மிகவும் அடிபட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த போது பள்ளிக் கல்வித் துறைக்கு ஏராளமான பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்.

     சீரமைப்பு

    சீரமைப்பு

    பாடத்திட்டங்கள் சீரமைப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ரேங்கிங் முறையை ரத்து செய்தது, ரேங்கிங்கை வைத்து தனியார் பள்ளிகள் கட்டணைக் கொள்ளையில் ஈடுபட்டதை உள்ளிட்டவற்றை தடை செய்தார்.

     அண்ணா நூற்றாண்டு நூலகம்

    அண்ணா நூற்றாண்டு நூலகம்

    பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு 1200 மதிப்பெண்கள் இருந்ததை 600 மதிப்பெண்களாக குறைத்தார். அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைத்தது, டிஜிட்டல் நூலகம் அமைக்கும் பணிகள் ஆகியவை என சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென முன்னாள் அதிமுக அரசால் தமிழக தொல்லியல் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

     எதிர்க்கட்சித் தலைவர்

    எதிர்க்கட்சித் தலைவர்

    இதை பலரும் கண்டித்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் உதயச்சந்திரனை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது இயல்பான இடமாற்றம் என்றும் இவரை போல் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டதாக அதிமுக அரசு கூறியிருந்தது.

    முதல்வர்

    முதல்வர்

    இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் உதயச்சந்திரன் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் அதைவிட பலபடிகள் மேலே போய் முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

     ஆலோசனை

    ஆலோசனை

    முதல்வருக்கு ஆலோசனை வழங்குதல், முதல்வரின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பது, துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது போன்ற முக்கிய பணிகளில் உதயச்சந்திரன் உள்பட 4 அதிகாரிகளும் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    T.Udhayachandran IAS is appointed as one of the Principal Secretary to Chief Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X