"நான் தேர்தலில் வென்றேன்! உங்க மகன் ஜெய் ஷா எப்படி பிசிசிஐ தலைவரானார்!" அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி
சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷா உதயநிதியை குறிவைத்து நேற்றைய தினம் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு உதயநிதி இன்று இளைஞரணி கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுகவில் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் இருந்தாலும் கூட அங்கே மிகவும் வலுவாக உள்ள அணிகளில் ஒன்று என்றால் அது இளைஞரணி தான். ஸ்டாலின் இளைஞராக இருந்த போது தொடங்கிய இந்த அணியின் செயலாளராக இப்போது உதயநிதி இருக்கிறார்.

இதற்கிடையே இன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உதயநிதி உள்ளிட்ட முக்கிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு இந்தாண்டு நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
உதயநிதி: இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, உதயநிதி பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று குறிப்பிட்ட உதயநிதி, திமுக கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க மாநிலம் முழுக்க 100 பாசறை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய உதயநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமித் ஷாவுக்கு பதிலடி: தொடர்ந்து பேசிய அவர் மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்துக்குப் பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறுகையில், "நான் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன்.. உங்கள் மகன் ஜெய் ஷா பிசிசிஐ அமைப்பிற்கு எப்படி தலைவரானார்.. உங்கள் மகன் ஜெய்ஷா எத்தனை மேட்ச் விளையாடி இருக்கிறார். அவர் எத்தனை ரன் எடுத்துள்ளார். அவர் எப்படி பிசிசிஐ தலைவரானார் என்பதை விளக்குங்கள்.
இது மட்டுமா.. ஜெய் ஷா ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2014இல் வெறும் ரூ.75 லட்சமாக இருந்தது.. ஆனால் இப்போது பார்த்தால் அது ரூ.130 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தனை குறுகிய காலத்தில் இந்த அசுர வளர்ச்சிக்கு எப்படி வந்தது.. இதற்கு நமது மத்திய உள்துறை அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்.. மகனைப் பற்றிப் பேச முடியாமல் அவர் என்னைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறார்" என்று கேள்வி எழுப்பினார்.

அமித் ஷா என்ன சொல்லியிருந்தார்: முன்னதாக நேற்றைய தினம் அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாத யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது திமுகவை கடுமையாக அவர் விமர்சித்தார். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு திமுக அரசு தான் என்று சாடிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜியை ஏன் அமைச்சரவையை விட்டு நீக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுகவினருக்கு உதயநிதியை முதல்வராக்குவது லட்சியம் என்றும் காங்கிரசாருக்கு ராகுலை பிரதமர் ஆக்குவது லட்சியம் என்றும் அமித் ஷா சாடினார். மேலும், அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லை என்றும் தங்கள் குடும்பம் குறித்து மட்டுமே அக்கறை என்றும் அவர் தெரிவித்தார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications