இளையராஜாவை யாரும் விமர்சிக்கக் கூடாது.. முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.. உதயநிதி தகவல்
சென்னை: இளையராஜாவை யாரும் விமர்சிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மின் தடையை சரி செய்வதற்காக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தொகுதி முழுவதும் 108 ஆர்எம்யூக்கள் அதாவது ரிங் மெயின் யூனிட்கள் தேவைப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைத்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 29 இடங்களில் மின்துறையினர் புதிய ஆர்எம்யூக்களை அமைத்தனர்.

இளையராஜாவின் சொந்த கருத்து
ஜூன் மாதங்களுக்குள் மொத்த ஆர்எம்யூக்களும் அமைக்கப்படும். பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது அவருடைய சொந்த கருத்து. இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

யாரையும் அநாகரிகமான முறையில் விமர்சிக்கக் கூடாது
இளையராஜாவை மட்டும் அல்ல யாரை அநாகரிகமாக விமர்சித்தாலும் அது தவறுதான் என்றார். அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு உதயநிதி, செய்தியாளரிடம் உங்கள் ஆசை என்ன? என கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

ராஜ்யசபா எம்பி
இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க போகிறார்கள். அதற்காகத்தான் அவர் இவ்வாறு மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜக அரசுக்கு எதிரான பலர் இளையராஜாவை அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள்.

விமர்சனங்கள்
இத்தனை விமர்சனங்கள் வந்த நிலையில் தனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் தான் பதவிக்காக எதையும் பேசவில்லை என்றும் உண்மையைத்தான் சொன்னேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை திமுக சார்பில் இளையராஜாவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தும் வரவில்லை என கருதிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications