ஆளுநரை கேள்வி கேட்ட அம்மாசியப்பனுக்கு மிரட்டல்.. நாங்க இருக்கோம்.. என்ன பண்ணுவீங்க? உதயநிதி கேள்வி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கேள்வி கேட்ட சேலம் மாணவியின் தந்தை அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகீர் தகவலை அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வில் 720க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள், அவர்களுடைய பெற்றோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து எண்ணித் துணிக என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிகழ்வில் சேலம் மாணவியின் தந்தை அம்மாசியப்பன் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு எப்போது விலக்கு கிடைக்கும் என ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநரோ நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தால் தமிழகத்தில் மாணவர்கள் போட்டியிடும் திறனை இழந்துவிடுவார்கள். இது மாணவர்களுக்கு செய்யும் அநீதியாக மாறிவிடும்.
எனவே நீட் தேர்விலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க முடியாது என்றார். அதற்கு அந்த தந்தை நீட் தேர்வுக்கு முன்னரே தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளும் மருத்துவர்களும் சிறப்பாகத்தானே செயல்பட்டார்கள் என கேள்வி எழுப்பினார். அதை ஆளுநர் மறுத்த நிலையில் அவரை உட்காருங்கள் என கூறிவிட்டார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அம்மாசியப்பன், நீட் தேர்வில் என் மகள் ஜெயித்துவிட்டாள். ஆனால் அவருக்கு நான் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து நீட் கோச்சிங் அனுப்பி வைத்தேன். இது போல் எல்லா பெற்றோர்களாலும் செலவு செய்ய முடியுமா. அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயில்கிறார்கள் என ஆளுநர் சொல்வது தவறு.
அவர்கள் எல்லாம் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில்தான் மருத்துவப் படிப்பில் சேருகிறார்களே தவிர நீட் தேர்வால் அல்ல என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் திமுக அரசு- ஆளுநர் மாளிகை இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கண்டனங்களை எழுப்பினர்.
இதையடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக உண்ணாவிரத போராட்டம் இன்று நடத்தினர். திமுகவின் மருத்துவரணி, மாணவரணி, இளைஞர் அணி சார்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிமுக மாநாடு இருப்பதால் அங்கு தவிர மற்ற மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி, எம்பி தயாநிதிமாறன், எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் முதலில் நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அனிதாவின் காணொலியை பார்த்த உதயநிதி கண் கலங்கினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது. கல்வி என்பது உரிமை, அந்த உரிமையை பாதுகாப்போம். மாணவ மாணவியரின் கல்வி உரிமையை நாங்கள் பாதுகாப்போம்.
தமிழ்நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றி. தண்ணீர் கூட குடிக்காமல் கொலை பட்டினி உண்ணாவிரதம் இருந்துள்ளனர் திமுகவினர். இந்த வலி பெரிய வலி இல்லை, அனிதா தொடங்கி 21 பேர் பலியாகி விட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கேள்வி கேட்ட அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். ஆளுநரை கேள்வி கேட்டால் மிரட்டுவார்களா? அம்மாசியப்பனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம், என்ன பண்ணுவீங்க என உதயநிதி காட்டமாக பேசினார்.
-
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications