40 நடிகைகள்.. ஆளுக்கு ரூ.40 லட்சம்.. உதயநிதி நட்பு வட்டத்திற்கு செக்? திருச்சி சூர்யா சொன்ன தகவல்
சென்னை: சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள். அதற்கு 40 நடிகைகள் வந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் லூயிஸ் விட்டான் பேக் கொடுத்துள்ளனர். ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகிய உதயநிதியின் நட்பு வட்டாரம்தான் இதை ஏற்பாடு செய்துள்ளது என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தை கைது செய்தனர். தெலுங்கானாவில் சந்திசேகர ராவ் குடும்பத்தில் கை வைத்தனர். அதே பார்முலாவை இங்கே கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்தான் வருமானம் தரக்கூடிய துறை. இங்கே மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதனால் இதை பெரிதாக்க பார்க்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தை நேரடியாக குறி வைக்கிறார்கள். அதுதான் அவர்களின் பிளான். உதயநிதியின் நட்பு வட்டம் கடும் சிக்கலில் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள்.

இவர்கள் எல்லோருக்கும் நடிகைகள் காண்டாக்ட் உள்ளது. சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள். அதற்கு 40 நடிகைகள் வந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் லூயிஸ் விட்டான் பேக் கொடுத்துள்ளனர். 1 பேக் விலை 40 லட்சம் ரூபாய்.. ஆளுக்கு 40 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். எவ்வளவு மோசமான சூழல் என்று பாருங்கள். நடிகைகளின் பல விஷயங்கள் சிக்கி உள்ளன.
இவர்கள் எல்லாம் போதை பொருள்கள் பயன்படுத்தி உள்ளனர். அதை கையில் எடுப்பார்கள். போதை பொருள் வைத்து தீவிரமாக ரெய்டு விடுவார்கள். அதை உச்ச நீதிமன்றம் எப்படி தடுக்கும். ஏற்கனவே திமுக மீது இதில் கறை இருக்கிறது. அதைத்தான் டெல்லி கைவைக்க போகிறது. உதயநிதி இவர்களை எல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. அதனால் உதயநிதிக்கு நேரடியாக சிக்கல்கள் உள்ளன. டெல்லி இந்த விவகாரத்தை நேரடியாக கையில் எடுக்கிறது என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications