1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 1984-ம் ஆண்டு முதல் தேர்தல் பிரசாரம் செய்தவர் என அவரது நண்பரும் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு அண்மையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. திமுகவின் மகளிரணி செயலாளராக ஏற்கவே ஸ்டாலின் சகோதரி கனிமொழி இருந்து வருகிறார்.

திமுகவில் திடீரென நுழைந்து இளைஞரணி செயலாளர் பதவியில் அமர்ந்துவிட்ட உதயநிதி மீது அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காவே சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு எதிராக புகைச்சல்

உதயநிதிக்கு எதிராக புகைச்சல்

லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்து திமுகவுக்கு வெற்றியை தேடித் தந்தவர் உதயநிதி என்பதாலேயே அவருக்கு பதவி வழங்கப்பட்டதாக திமுக தலைமை முன்வைக்கும் சமாதானத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் உதயநிதி 7 வயதிலேயே ஸ்டாலினுக்காக பிரசாரம் செய்தார் என எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

1984 முதல் தேர்தல் பிரசாரம்

1984 முதல் தேர்தல் பிரசாரம்

தி பிரிண்ட் இணையதளத்துக்கு அன்பில்மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 1984-ம் ஆண்டு ஸ்டாலின் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டபோது அவருடன் பிரசாரத்துக்கு சென்றவர் உதயநிதி. அப்போது 12 வயதுதான் உதயநிதிக்கு.. (அப்போது வயது 7). உதயநிதி வளர்ந்த பின்னர் ஸ்டாலினுடன் ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்துக்கும் உடன் சென்றவர் உதயநிதி.

அனைத்து தேர்தல்களிலும் பிரசாரம்

அனைத்து தேர்தல்களிலும் பிரசாரம்

உள்ளாட்சி தேர்தல், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் என அனைத்திலும் பங்கேற்றவர் உதயநிதி. அவர் மிகவும் அமைதியாக இருப்பார். அவரை சுற்றி இருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார்.

கொடிபிடித்து முழக்கமிட்டவர் உதயநிதி

கொடிபிடித்து முழக்கமிட்டவர் உதயநிதி

கட்சி நிகழ்ச்சிகளில் பொதுவாக மேடை ஏறமாட்டார். மேடைக்கு கீழேதான் அமர்ந்திருப்பார். ஒருபோதும் மேடையில் ஏறி அமர வேண்டும் என நினைக்காமல் தொண்டர்களோடு தொண்டராகத்தான் அமர்ந்திருப்பார். பொதுக்கூட்ட மேடைக்கு கீழே நின்று கட்சி கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருப்பார் உதயநிதி.

இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+