போடியில் வாக்கு சேகரிக்க போன உதயநிதி.. தொண்டர்கள் சொன்ன வார்த்தை! ஓபிஎஸ் முகத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

தேனி: போடி நாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, கடந்த முறை இவர் நம்மள 10 ஆயிரம் வோட்ல ஜெயிச்சிட்டார் இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து கெத்தாக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சரியா என்று தொண்டர்களை பார்த்து சொன்னார். அதற்கு தொண்டர்கள் சொன்ன பதில் ஓபிஎஸ்சை நெகிழ வைத்துவிட்டது.

தமிழக அரசியல் களம் அனல் பறக்கிறது. தலைவர்கள் நாலாபுறமும் சுற்றி சுழன்று பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஓ பன்னீர் செல்வம் இந்த முறையும் தேனி மாவட்டத்தில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அப்போது அவரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Udhayanidhi Stalin Campaigns O Panneerselvam Constituency Delighted by the Words of DMK Cadres

பெருமையாக கருதுகிறேன்

இன்று காலையில் மதுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தேன். அடுத்து ஆண்டிப்பட்டி முடிச்சிட்டு, உங்கள பாக்க போடி வந்து இருக்கேன். எப்போ எங்கே எந்த மாவட்டத்திற்கு போனாலும், தேனி எனக்கு எப்போதுமே கெத்து தான்.. எனவே இந்த முறை அண்ணன் ஓ பன்னீர் செல்வம் அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.. என்ன செய்வீர்களா. எனக்கும் தேனி மாவட்டத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்குது.

நான் எந்த மாவட்டத்திற்கு போவதற்கு முன்பாக, 20218 ஆம் ஆண்டு நான் இளைஞர் அணி செயலாளர் கூட கிடையாது. கிராம சபை கூட்டம் நடத்தினாங்க.. அப்போ நான் முதல் முதலாக வந்தது இந்த தேனி மாவட்டம் தான். என் அரசியல் வாழ்க்கைக்கு முதல் அஸ்திவாரம் போட்டதே இந்த தேனி மாவட்டம் தான்.. ஓ பன்னீர் செல்வம் அவர்களை பற்றி நான் சொல்ல வேண்டுமா?.. இந்தியாவிற்கே தெரிந்தவர்.. அவருக்காக இன்று நான் பிரசாரம் செய்ய வந்ததை நான் மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.

இந்த முறை அதற்கும் சேர்த்து

எளிய குடும்பத்தில் இருந்து வந்து, இன்று பெரிய நிலையை அடைந்திருப்பவர் ஓ பன்னீர்செல்வம். எப்போதும் சிரித்தபடியே இருப்பவர்.. மாத்தி மாத்தி காலைப் பிடித்து துரோகம் செய்தவரை வீழ்த்துவதற்காகவே, அவருக்கு சரியான பாடத்தை புகட்டவே ஓ பன்னீர் செல்வம் வந்திருக்கிறார். எனக்கு ஓ பன்னீர் செல்வம் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான்.. அதாவது அதிமுக வேட்பாளர் டெப்பாசிட் கூட பெறக்கூடாது.. என்ன செய்வீங்களா..

போன முறை சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம தான் அண்ணன் ஓ பன்னீர் செல்வத்திடம் தோற்றோம். இந்த முறை அதற்கும் சேர்த்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து கெத்தாக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சரியா.. (அப்போது தொண்டர்கள், 1 லட்சம்.. 1 லட்சம் என கூறி உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர்.. அப்போது ஓ பன்னீர் செல்வம் முகம் பூரிப்படைந்தது. 1 லட்சம் வாக்குகள் என்று சொன்னதும் ஒபிஎஸ் முகமலர்ந்து புன்னகையுடன் காணப்பட்டார்.)

ரொம்ப ரொம்ப முக்கியம்

ஆம் சரி.. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்க போகிறது. இதே உணர்வு.. இதே எழுச்சி என அடுத்த ஒரு வாரத்திற்கு இருக்க வேண்டும். ஏதோ உதயநிதி வந்தார். கூட்டம் நடந்துச்சு என இருந்திட கூடாது.. இதே எழுச்சியுடன் அடுத்த ஒரு வாரத்திற்கு பணி செய்ய வேண்டும். ஏனென்றால் இது தான் ரொம்ப ரொம்ப முக்கியம்" இவ்வாறு உதயநிதி பிரசாரம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+