புயல் நேரத்தில் காசிமேடு மீனவர்களை கடலுக்குள் செல்ல அனுமதித்தது யார்? தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவில் சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில், புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

udhayanidhi stalin

மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.

புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?

உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.

இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 29.10.2026 அன்று விசைப்படகில், மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கா.பக்கிரிகசாமி (எ) சூர்யா (வயது 49), திரு.ம.குப்பன் (வயது 48), சே.மோகன் (வயது 47), கா.ராஜேஷ் (வயது 52), ஆ.முருகன் (வயது 48), வா.குப்புசாமி (வயது 58), சி.விஜயகாந்த் (வயது 44), அ.அரவிந்த் (வயது 40), மு.நாராயணன் (வயது 57) ஆகிய 9 மீனவர்கள் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைப் துறையால் வழங்கப்பட்ட புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையினால், ஆந்திரப் பிரதேச மாநிலம், நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்த நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயப்பட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், காணாமல் போன படகில் இருந்த மீனவர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு 03.11.2026 அன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன படகிலிருந்து எந்தவிதத் தொடர்பும் கிடைக்கப் பெறாததாலும், அவர்களின் இருப்பிடம் குறித்த எந்தவிதத் தகவலும் தெரியாததாலும், சென்னை மீன்பிடித் துறைமுக மீன்பிடி படகுகள், ஆந்திரப் பிரதேச மாநில மீன்பிடி படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய, ஆந்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோதபட்டினம் கடலோரத்தில் சே.மோகன், ஆ.முருகன், சி.விஜயகாந்த் ஆகிய மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், மீட்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணியினையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியினையும் விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஏழு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கிடவும், அவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+