என்னை ‘சின்னவர்’ என்று அழைக்க இது தான் காரணம்! சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சட்டசபையில் உள்ள தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே தான் சின்னவன் தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Stalin Is More Dangerous Than Kalaignar என்பது தான் முதல்வருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன் இது தொடர்பாக அவர் பேசியதாவது;

சின்னவர்
இங்குள்ள பலர் என்னை 'சின்னவர்' என்றும் 'சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை' என்றும் அழைப்பதை கேட்கிறேன். இங்குள்ள தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே நான் சின்னவன் தான். மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அன்பும் ஆலோசனையும்
அதற்கு உங்கள் அனைவரின் அன்பையும் ஆலோசனையும் வழங்குமாறும் வழிகாட்டுமாறும் பேரவைத் தலைவர் உள்ளிட்ட இந்த அவையினரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சிப்பொறுப்பேற்று இந்த ஓராண்டுகளில் தலைவர் அவர்களின் உழைப்பை, மக்கள் பணியைப் பார்த்து எதிர்க்கட்சியினரும் பாராட்டுகின்றனர்.

சிறந்த பாராட்டு
Stalin Is More Dangerous Than Kalaignar. இதுதான் மாண்புமிகு நம் முதல்வருக்கு, தலைவர் அவர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு. இத்துறை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு வழங்கிய பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், துறையின் அமைச்சர் அவர்களுக்கும் மீண்டும ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

ஒற்றைக் குரல்
முன்னதாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரது சார்பில் ஒற்றைக் குரலாக சட்டசபையில் ஒலித்து அவர்களது கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் நீண்ட நெடிய நேரம் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications