துணை முதலமைச்சரா? எல்லா அமைச்சரும் துணையாகத்தான் இருக்கிறோம்.. உதயநிதி சிம்பிள் பதில்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்று சமீப நாட்களாக பேச்சுக்கள் அடிப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் சிம்பிளாக பதிலளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று அவ்வப்போது பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் சிலரே இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெறும் கட்சி கூட்டங்களில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானங்களும் அவ்வப்போது இயற்றப்பட்டு, இது தொடர்பான விவாதங்களை அதிகரிக்க செய்திருக்கின்றன.

குறிப்பாக நேற்று நடந்த திமுக பவள விழாவில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பேச்சுகள் எழுந்தன. மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம்?" என்று முதலமைச்சரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
முன்னதாக முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின்போது, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும், அவர் அமெரிக்காவிலிருந்து வந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் உடன்பிறப்புகள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்படி இருக்கையில், இன்று அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் உதயநிதியும் பங்கேற்றிருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் உதயநிதி துணை முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் கூறுகின்றனர். இதற்காக அறிவாலயத்தை பட்டாசுகளுடன் அவர்கள் குவிந்திருக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு உதயநிதி சிம்பிளாக பதிலளித்திருக்கிறார். அதாவது, "துணை முதலமைச்சர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்" என கூறியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications