அண்ணா பல்கலை. சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்.. என்ன காரணம்?
சென்னை : அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2021 செப்டம்பர் முதல் இப்பொறுப்பில் இருந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு புதிய உறுப்பினர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாதம் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். பல்கலைக்கழகம் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளிக்கும். இதனால், பல்கலைக்கழக விவகாரங்களில் சிண்டிகேட் உறுப்பினர் பதவி அதிகாரம் மிக்கது.
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அப்போது அறிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலை., சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டு தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருவதால் உதயநிதி இந்த சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார் உதயநிதி.
-
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications