Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெசன்ட் நகர் கடற்கரையில் மனம் நிறைந்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள் .. சிறப்பு பாதையை திறந்த உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை இன்று திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். மாற்றுத் திறனாளிகள் அந்த வழியாகச் சென்று கடலில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலைக் கண்டு மகிழ்ந்திடும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அணுகும் பாதை திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்து பார்வையிட்டார்.

Chennai besant nagar udhayanidhi stalin

சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தர மரப்பாதை அமைக்கப்பட்டது. அதனை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார். இந்தியாவிலே முதல்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் தான், மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகே செல்ல ஏதுவாக இதுபோன்ற மரப்பாதை அமைக்கப்பட்டது.

இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த மரப்பாதை, பெரும் வரவேற்பைப் பெற்றது.

Chennai besant nagar udhayanidhi stalin

இந்நிலையில், இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் ரூபாய் 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்தில், 2.80 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மரப்பாலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, மாற்றுத்திறனாளிகளுடன் பயணித்து, அவர்கள் கடற்கரை நீரில் கால் வைத்து மகிழ்வதைக் கண்டு ரசித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை‌யை ஏற்று முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் பாதை அமைக்கப்பட்டது.

Chennai besant nagar udhayanidhi stalin

அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் ரூபாய் 1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அணுகும் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மரப்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், "மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள், மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் மேம்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, 2021-இல் கழக அரசு அமைந்த ஓரிரு மாதங்களிலேயே, மாற்றுத்திறனாளிகள், மெரினா கடற்கரைக்குச் சென்று கடல் அலையில் கால் நனைக்கும் வண்ணம், பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டது.

இதற்கு கிடைத்த பாராட்டையும், வரவேற்பையும் மனதிற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும், மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று வரும் வண்ணம் சிறப்பு நடைபாதையை அமைத்திட உத்தரவிட்டார்கள். அதன்பேரில், சென்னை மாநகராட்சி மூலம், ரூ.1.61 கோடி மதிப்பில் பெசன்ட் நகர் கடற்கரையில், அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை இன்று திறந்து வைத்தோம்.

மரப்பாதையின் வழியே கடல் அருகே சென்று அலையை ரசித்த மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+