பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீட்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரவு 11 மணியளவில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மழை பெய்யும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். சமூக வலைதளங்கள் மூலம் புகார்கள், தொலைபேசி மூலம் வரும் புகார்களையும் ஆய்வு செய்துள்ளோம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "பொதுமக்கள் நாளை வெளியே வர வேண்டாம். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் துரிதமாக எடுத்துள்ளார். பொதுமக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 13 நிவாரண மையங்களில் 1,058 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி தயார் நிலையில் உள்ளது" என்று கூறியிருந்தார்.
புயல் காரணமாக நாளை சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட இருந்த 47 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டை நோக்கி, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த டிட்வா புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. இரவு 11 மணி நிலவரப்படி சென்னைக்கு 280 கி.மீ தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ தூரத்திலும் புயல் நிலை கொண்டுள்ளது.
புயல் காரணமாக இரவு முதல் சென்னையில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், டிச.1ம் தேதி முதல் மழையின் தாக்கம் குறைய தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். தற்போது டெல்டா மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியிருக்கிறது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications