கேட்டதுமே வந்திருச்சு.. திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் மக்கள் ஹேப்பி.. உடனே ஆக்சன் எடுத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மின் கட்டணம் செலுத்துவதற்கான மையம் அருகாமையிலேயே வேண்டுமென்று சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை உடனே நிறைவேற்றி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பரில் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். உதயநிதி அமைச்சராவதற்கு முன்பு தனது தொகுதியான சேப்பாகத்திற்கு அடிக்கடி செல்வார். அங்கு குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். உதயநிதி உத்தரவிட்ட அடுத்த சில நாளில் அங்கு வேலைகள் விறுவிறுப்பாக நடக்கும்.

அமைச்சராகிய பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் உதயநிதி, இப்போது அடிக்கடி சேப்பாக்கம் தொகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் நடுகுப்பம் மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான மையம் அருகாமையிலேயே வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் பரிசீலனை செய்யுமாறு உதயநிதி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கணினி வசூல் மையம் & மின் தடை நீக்க பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது

இது பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "மின் கட்டணம் செலுத்துவதற்கான மையம் அருகாமையிலேயே வேண்டுமென்ற திருவல்லிக்கேணி சேப்பாக்கம்" தொகுதி நடுக்குப்பம் பகுதியினரின் கோரிக்கையை ஏற்று, திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கணினி வசூல் மையம் & மின் தடை நீக்க பிரிவு அமைக்கப்பட்டது. அந்த மையத்தின் சேவையை இன்று தொடங்கி வைத்தோம். அப்போது பொதுமக்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications