சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! 3 புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல்! 24 மாதங்களில் பணி முடியும்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல்.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் ரூ.369 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள் அமைக்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் பாலப் பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்படவுள்ள மேம்பாலங்களின் முழு விவரம் வருமாறு;

மேம்பாலங்களின் விவரம்
கோடம்பாக்கம் மண்டலம், வார்டு - 133 மற்றும் வார்டு 141 ல், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி நகர் பிரதான சாலையில் ரூபாய் 131 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 1200 மீ, மொத்த அகலம் - 8.40 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள், மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

2 லட்சம் பொதுமக்கள்
தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 45 மற்றும் 70 ல் கணேசபுரம் சுரங்க பாதையின் மேல் ரூபாய் 142 கோடி மதிப்பில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் - 678 மீ, பாலத்தின் அகலம் - 15.20 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள். மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

பாலத்தின் நீளம் -அகலம்
தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு - 41ல், மணலி சாலையில் இரயில்வே சந்திக்கதவு 2 ந-ன் குறுக்கே, ரூபாய் 96.04 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் - 840 மீ, பாலத்தின் அகலம் - 8.4 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள். மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 1.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தினசரி 25 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

உதயநிதி பேச்சு
முன்னதாக இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தாம் வாக்குறுதி கொடுத்ததாகவும். அதன் அடிப்படையில் இப்போது தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications