சேலம் மாவட்டத்தில் அதிமுக ஜெயித்தது எப்படி? திமுக நிர்வாகிகளிடம் உதயநிதி கிடுக்கிப்பிடி!
சென்னை: சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுக தீயாய் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னை அழைத்து தினமும் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக 10 தொகுதிகளில் தோல்வியை தழுவியது எப்படி எனக் கேட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இந்த கேள்வி வரும் என்பதை எதிர்பார்க்காத பலரும் திகைத்து விட்டார்கள். இரண்டரை வருஷத்துக்கு முன்னால் அடைந்த தோல்வி குறித்து இப்போது எதற்கு கேட்கிறார் என பலரும் கப்சிப்பென்று அமர்ந்திருந்த நிலையில், திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுகவுடன் அண்டர் டீலிங்கில் ஈடுபடுவது குறித்து சூசகமாக கூறிய உதயநிதி ஸ்டாலின் சில முக்கிய இன்ஸ்ட்ரக்சன்ஸ்களை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
போதா குறைக்கு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான கே.என்.நேரு தனது பாணியில் சில கட்டளைகளை போட்டு சேலம் மாவட்ட நிர்வாகிகளை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் மேற்கு மண்டலத்தை இன்சார்ஜ் எடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், சேலத்துடன் சேர்த்து கோவை, திருப்பூர் மக்களவைத் தொகுதிகள் மீதும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

யாரெல்லாம் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஓய்வு கொடுத்துவிடுவது என்ற முடிவோடு உள்ள அவர் அதற்கேற்றவாறு இப்போதே நிர்வாகிகளை எச்சரித்து அனுப்புகிறார். தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி, எவ வேலு உள்ளிட்டோரும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications