அப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க!.. உதயநிதி ஸ்டாலின்
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைவரும் தனது தந்தையுமாகிய முக ஸ்டாலின் போட்டியிடுமாறு பணித்தால் நான் போட்டியிட தயாராக உள்ளேன் என இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்பதால் திமுகவும் அதிமுகவும் அதற்கான விருப்ப மனுக்களை விநியோகித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலை காட்டிலும் இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காரணம் மக்களின் செல்வாக்கு என்பது யாருக்கு என்பதை வைத்து 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முடிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த தேர்தலை அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தலைமை கழகம்
20-ஆம் தேதி வரை திமுக சார்பில் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழகம் அல்லது மாவட்ட கழகத்தில் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

பொறுப்பாளர்கள் யார்
சென்னை மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும், சென்னை தெற்கு மாவட்டத்தில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும், சென்னை வடக்கு மாவட்டத்தில் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும் விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

விருப்ப மனு
இந்த நிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசுவும், சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவும், எம்எல்ஏ மா சுப்பிரமணியத்திடம் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர்.

புத்தகம் வழங்கும் விழா
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்காக படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பகத்துக்கு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் உதயநிதி கலந்து கொண்டார்.

நான் ரெடி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னால் உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன் என்றார்.
-
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications