“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்
சென்னை: சென்னையில் காவலர் ஒருவர் உட்பட 3 பேர் சேர்ந்து, சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு புதியதாக பொறுப்பேற்றிருக்கிறது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றன.

என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், விடுமுறைக்காக சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்திருக்கிறார்.
பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், சிறுவன் உறவினருடன் இருந்திருக்கிறார். அப்போது உறவினர் தனது நண்பரான தலைமை காவலரை அழைத்துக்கொண்டு மது அருந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். பின்னர் போதையில் தலைமை காவலர், சிறுவனுக்கு வாயில் கட்டாயப்படுத்தி மது ஊற்றி பாலியல் ரீதயாக துன்புறுத்தியிருக்கிறார்.
இதனையடுத்து தலைமை காவரை தாக்கிவிட்டு, வீட்டை வெளியில் பூட்டிக்கொண்டு, ஓடி சென்று அசோக் நகர் காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் தலைமை காவலரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தலைநகரில் சிறார்களுக்கு பாதுகாப்பு இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உதயநிதி கண்டனம்
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து தனது x பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு. இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி. இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications