நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி
சென்னை: 10 முறை முதல்வர் ஆன நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால், ஊர்ந்து ஊர்ந்து முதல்வர் ஆன எடப்பாடி பழனிசாமி எல்லாம் அவங்களுக்கு ஒரு ஆளே கிடையாது.. சும்மா ஊதி தள்ளிவிட்டு போயிடுவாங்க.. என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்ய தொடங்கியுள்ளன. தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய ஒரு புறம் கட்சிகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் இன்னொரு புறம் வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் என மும்முரம் காட்டி வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
தமிழகத்தில் திமுக, அதிமுக பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் ஆளும் திமுக எதிர்க்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. பதிலுக்கு பழனிசாமியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கடுமையான விமர்சனங்களை திமுக மீது முன் வைத்து வருகிறார்.
இந்த சூழலில் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சொல்லிவிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால் எடப்பாடி எல்லாம் பாஜகவுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது என்று கூறியுள்ளார்.
நிதிஷ் குமாருக்கு வந்த நிலைமை
உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- நாம அவசரமாக வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்.. வீட்டில் கார் இல்லை.. பைக் இல்லை என்றால் ரேபிடோவில் புக் பண்ணுவோம். ஓலோ வர சொல்லி அவசரமாக போக வேண்டிய இடத்துக்கு போய்விடுவோம்.
அதே மாதிரி இப்போது பாஜக அதிமுகவை புக் பண்ணி வைத்துக்கொண்டு அவங்க அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு பீகாரை எடுத்துக்கொள்ளுங்கள்.. பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது நிதிஷ் குமார். முதல்வராக நிதிஷ் குமாரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இப்போ என்ன ஆச்சு.. அவர் முதல்வர் பதவியை விட்டு விலகிவிட்டார்.
ஊர்ந்து ஊர்ந்து பதவிக்கு வந்த எடப்பாடி
நிதிஷ் குமாரை ஓரங்கட்டிய பாஜக இப்போது அந்த மாநிலத்தையே தன் கண்ட்ரோலில் எடுத்துக்கொண்டது. நிதிஷ் குமாரை எம்பி ஆக்கிட்டாங்க.. நிதிஷ் குமார் 10 முறை முதல்வர் ஆனவர். 10 முறை முதல்வர் ஆன நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால், ஊர்ந்து ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்கிய எடப்பாடி பழனிசாமி எல்லாம் அவங்களுக்கு ஒரு ஆளே கிடையாது.. எடப்பாடியை ஊதி தள்ளிவிட்டு போயிடுவாங்க..
தேர்தலுக்கு பிறகு பாருங்க.. அதிமுகவை பாஜக மென்னு தின்று துப்பிவிடும்.. அவ்வளவு தான் அவர்கள் நிலைமை.. பாதம் தாங்கி பழனிசாமி எல்லாம் பாஜகவை எதிர்த்து நிற்கிற தகுதி கிடையாது.. இன்னைக்கு இந்தியாவிலேயே பாஜக நேருக்கு நேர் எதிர்த்து கேள்வி கேக்குற ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான்.. இவ்வாறு அவர் பேசினார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications