"ரகசியமாக".. முருகேசன் வீட்டிற்குள் திடீரென நுழைந்த உதயநிதி.. அப்படியே மலைத்துப் போன காஞ்சி..!

காஞ்சிபுரம் திமுக பிரமுகர் வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பிரமுகரின் வீட்டிற்குள் நுழைந்து உதயநிதி ஸ்டாலின் ஒரு ஸ்வீட் ஷாக் தந்துள்ளார்.. காஞ்சிபுரம் திமுகவே இதை பற்றிதான் பேசி கொண்டிருக்கிறது...!

உதயநிதியை பொறுத்தவரை அனைவரிடமும் எளிதாக பழகுபவர்.. ஈகோ இருக்காது.. இவர் மேடையில் பேசினாலும் சரி, பிரச்சாரத்தில் பேசினாலும் சரி, கேஷூவலாக பேசுவார்.. அதனால்தான் இவர் பிரச்சாரத்திற்கு ராத்திரி நேரமானாலும் கூட்டம் அலைமோதும்.

இப்போதும் பிரச்சாரத்தில் ஈடுபடுட்டு வருகிறார்.. மாவட்டந்தோறும் மக்களை நேரடியாகவே சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.. அதன்படி, கடந்த பிப்ரவரி 3, 4 தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொண்டர்

தொண்டர்

அப்போதுதான் பி.முருகேசன் ஞாபகம் உதயநிதிக்கு வந்தது.. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரான பிஎம் குமாரின் அப்பாதான் பி.முருகேசன்... திமுகவின் அதி தீவிரமான தொண்டர்.. ஆரம்ப கால திமுகவில் இருந்தே பிடித்தம் கொண்டவர்.. இவருக்கு கல்யாணமே அறிஞர் அண்ணாவின் தலைமையில்தான் நடந்தது.

 எம்எல்ஏ

எம்எல்ஏ

1960-ல், ஒன்றிய துணை சேர்மேனாக இருந்தவர்.. தொகுதி மக்களிடம் வெகு பிரபலம்.. மிசா காலத்தில் ஜெயிலுக்கும் சென்றனர்.. காஞ்சி தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக பதவியை வகித்தவர்.. இப்போதுகூட முருகேசன் என்றாலே தொகுதி மக்களிடம் மிகுந்த மரியாதையும், நல்ல பெயரும் நீடித்து வருகிறது. இவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.

ரகசியம்

ரகசியம்

அவரது நினைவு தினத்தை குறித்து கேள்விப்பட்டதும், எப்படியாவது அவர் வீட்டுக்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உதயநிதி முடிவு செய்தார்.. ஆனால், அந்த விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.. எனவே, முருகேசன் குடும்பத்தினருக்கு மட்டும் தகவல் சொல்லப்பட்டது..

 திடீர் ஏற்பாடு

திடீர் ஏற்பாடு

திடுதிடுப்பென்று உதயநிதி வருகிறார் என்று சொன்னதுமே, முருகேசன் குடும்பத்தினர் வெலவெலத்து போய்விட்டனர்.. அதற்குள் அவசர அவசரமாக ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.. பிறகு உதயநிதி ஸ்டாலின், மேல்ஒட்டிவாக்கத்தில் உள்ள முருகேசனின் வீட்டுக்குள் நுழைந்தார்.. அங்கே ஒரு சேரில் முருகேசனின் படம் வைக்கப்பட்டிருந்தது.. அந்த படத்திற்கு மாலை அணிவித்து உதயநிதி மரியாதை செய்தார்..

 பரபரப்பு

பரபரப்பு

குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.. சிறிது நேரம் அவர்களுடன் அங்கேயே உட்கார்ந்து பேசிவிட்டு, அதன்பிறகு கிளம்பி பிரச்சாரத்துக்கு சென்றார். இப்படி ஒரு திடீர் நிகழ்வு ஏற்பட்டதும் முருகேசன் குடும்பத்தினர் திக்குமுக்காடி போயுள்ளனர்.. கட்சி பிரமுகர் வீட்டுக்கு உதயநிதி இப்படி சென்று இன்ப அதிர்ச்சி தந்ததும், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசியதும் காஞ்சிபுரம் திமுகவையே திகைக்க வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+