நீண்ட வரிசையில் காத்திருந்த போது நெகிழ்ச்சி.. தூய்மை பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்றபோது, தூய்மைப் பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது தூய்மைப் பணியாளர்கள் கேட்டதால் அவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்தார் அமைச்சர் உதயநிதி.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அமைச்சரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகா உதயதிநிதோடு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தனது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

வாக்களிக்க வரிசையில் காத்திருந்தபோது, வாக்களிக்க வரிசையில் நின்ற தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் பெண்கள் சிலர் உதயநிதி ஸ்டாலினிடம் செல்ஃபி எடுக்க விரும்பினர். அவர்களிடம் செல்போனை வாங்கி தானே அவர்களுடன் நின்று செல்ஃபி டுத்தார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து, மகிழ்ச்சியுடன் அவர்கள் செல்போனை வாங்கிக் கொண்டனர்.
வாக்களித்தது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "மக்களவைத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணைவியாருடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினோம். பாசிசத்தை வீழ்த்தவும் - மாநில உரிமைகளை மீட்கவும் ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள். இந்தியா வெல்லட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications