காங்கிரஸ், விசிக.. என்ன நடந்தாலும் இனி சேர்க்க கூடாது.. துளியும் விரும்பாத உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் மற்றும் விசிகவை மீண்டும் கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு துளியம் விருப்பவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. திமுகவில் இருக்கும் இளம் நிர்வாகிகள் பலரும் இதே மனநிலையில் தான் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் விலகிவிட்டன. இதில் கூட்டணியில் இருந்து விலகிய போதும் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளுடன் திமுக உறவாடி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூட ஒருமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று நல்லகண்ணு சிலையை திறந்து வைத்தார்.

Udhayanithi Stalin DMK Thirumavalavan

அதேபோல் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை விஜய் மீது வைத்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் திமுகவை தொடர்ந்து சாடி வருகிறது. அமைச்சர் வன்னி அரசு, சங்கத்தமிழன் உள்ளிட்டோர் திமுகவை மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

மறுபக்கம் காங்கிரஸ் கட்சி திமுகவை பாஜகவுக்கு நிகராக சாடி வருகிறது. மாணிக்கம் தாகூரின் பேச்சுகளால் கொந்தளித்த திமுக தலைமை, அவரை வசை வார்த்தைகள் கொண்டு கடுமையாக விமர்சித்தது. இதனிடையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி தவெக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அசைத்து பார்த்துள்ளது.

இதனால் விசிக தலைவர் திருமாவளவன், 35 மார்ச் எடுத்தால் தான் பாஸ்.. இரண்டாம் இடத்திற்கு வந்த திமுகவுக்கு, முதலிடத்திற்கு வர கூட்டணி வேண்டாமா? பாஸாக ஒரு மார்க் தேவையென்றாலும், அதனை போடுவதற்கு வாத்தியார் வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார். இதன் மூலமாக மீண்டும் திமுக கூட்டணிக்கு திரும்பும் எண்ணத்தை விசிக வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

ஒருவேளை பாமக பக்கம் தவெக சென்றால், திமுகவுடன் இணைய தயார் நிலையில் இருக்க திருமாவளவன் இப்படி பேசியதாக தெரிகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் இனி காங்கிரஸ் மற்றும் விசிகவை இனி சேர்த்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதே எண்ணத்தில் தான் திமுக இளைஞரணி நிர்வாகிகளும் இருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் ஆசான் என்று திருமாவளவனை கூறியதன் காரணமாகவே, திருமாவளவன் தன்னை ஆசிரியர் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை தவெக கூட்டணியில் இருந்து விசிக விலகி மீண்டும் திமுக பக்கம் வந்தால், ஸ்டாலின் என்ன முடிவு செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+