நோ ஷேவ்.. நோ ஃபார்மல்.. நோ மேக் அப்.. மிக கேசுவலாக அமைச்சர் பதவியேற்க வந்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: முதல்முறையாக அமைச்சர் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் எவ்வித பதற்றமும் இல்லாமல் மிகவும் கேசுவலாக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காணப்பட்டார்.
பொதுவாக அமைச்சர் பதவியேற்பவர்கள் யாராக இருந்தாலும் முகத்தில் கிளீன் ஷேவ் செய்து, தலைமுடிக்கு டை அடித்து, ஸ்டார்ச் போட்ட வேட்டி சட்டை அணிந்து, மிகவும் ஃபார்மலாக காட்சியளிப்பார்கள்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் அது போல் எல்லாம் இல்லாமல் எப்போதும் போல் மிக கேசுவலாக வந்து அமைச்சர் பதவி ஏற்றிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்று பதவியேற்றுள்ள நிலையில் முன்னதாக இந்த பதவியேற்பு விழாவுக்காக ஆளுநர் மாளிகை வந்த அவரது முகத்தில் எந்த பதற்றமும் தென்படவில்லை. மிகவும் கேசுவலாக ஜீன்ஸ் பேண்ட் ஒயிட் ஷர்ட்டுடன் வந்த அவர் எல்லோரிடமும் சிரித்துப் பேசி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அமைச்சராக போகிறோம் என்பதற்காக தலையில் டை அடித்து, கிளீன் ஷேவ் செய்து மேக் அப் எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை.

கருப்பு சிவப்பு
எப்போதும் எப்படி இருப்பாரோ அப்படித்தான் இன்றும் அமைச்சர் பதவியேற்க வந்தார் உதயநிதி ஸ்டாலின். ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்றபோதும் கூட இயல்பாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் தோளில் தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினார். உதயநிதி அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் மேல் வலது புறத்தில் திமுகவின் கருப்பு சிவப்பு கொடி பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி வேட்டி
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ப்வு விழாவுக்கு வேட்டி சட்டையில் வருவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் எப்போதும் ஒரே மாதிரி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாக அமைச்சர் பதவியேற்றுச் சென்றார். ஆளுநர் மாளிகைக்கு கட்சிக் கொடி கட்டிய காரில் வந்திறங்கிய அவர் அங்கிருந்து புறப்பட்ட போது தேசியக் கொடி கட்டிய அரசு வாகனகத்தில் கோட்டைக்கு சென்றார்.

குழு புகைப்படம்
உதயநிதி ஸ்டாலினோடு சேர்த்து ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது மூத்த அமைச்சர்கள் பலரும் உதயநிதியை தேடி வந்து வாழ்த்துக் கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications