Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. விடுதி மாணவர்களின் உணவு தொகையை உயர்த்துவதற்கு இத்தனை ஆய்வுகளா? உதயநிதி பகிர்ந்த தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு விடுதி மாணவர்களின் மாதாந்திர உணவுக்கான உதவித் தொகையை தமிழ்நாடு அரசு தற்போது உயர்த்தி இருக்கிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உணவு உதவித் தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதேபோல, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.1,100 வழங்கப்படுகிறது. இந்த தொகையில்தான் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இது போதாது என நீண்ட காலமாக மாணவர்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மாத உணவுக்காக வெறும் ரூ.1,000 மட்டும் ஒதுக்குவது எப்படி சரியாக இருக்கும்? எனவும் கேள்வியெழுப்பினர்.

Udhayanidhi Stalins explanation about the field study conducted to increase the food stipend for hostel students

இதற்காக மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாக அவ்வப்போது மாநில அரசுகள் சொற்பமான அளவில் உணவுக்கான தொகையை உயர்த்தி வழங்கி வந்தன. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கான விடுதி உணவு தொகையை ரூ.1000லிருந்து ரூ.1,400ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உணவு உதவித் தொகையை ரூ.1,100லிருந்து, ரூ.1,500ஆகவும் உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எஸ்.பிக்கள் உடனான ஆலோசனை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது. இது மாநிலம் முழுவதும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பெரும் ஆசுவாசத்தை அளித்திருக்கிறது. இந்நிலையில், இந்த உணவுக்கான நிதியை உயர்த்தி வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமாக கூறியுள்ளார்.

அதாவது, "தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 22 மாவட்டங்களுக்கு இதுவரை நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, மாவட்டங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை & ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வுகளின்போது, விடுதி மாணவர்கள் - அலுவலர்கள் உள்ளிட்டோர் உணவு - தங்குமிடம் உள்ளிட்ட விடுதியின் வசதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவற்றை, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்று, ஆலோசனைகளை மேற்கொண்டோம். மேலும், கள ஆய்வு தொடர்பாக விரிவான அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், விடுதியில் தங்கிப் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1100-லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்க மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் நம் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, அரசு விடுதிகளின் உணவு உதவித்தொகை ரூ.100 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், நம் திராவிட மாடல் அரசு மாணவர் ஒருவருக்கு தலா ரூபாய் 400 உயர்த்தியுள்ளது. இந்த சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாடெங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ - மாணவியருக்கு என் அன்பும் - வாழ்த்தும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+