Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை எய்ம்ஸ் என்னவானது? இதை மட்டும் பிரதமரிடம் கேளுங்க.. எடப்பாடிக்கு கோரிக்கை வைத்த உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டால் விடிவு காலம் பிறக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதாக விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இனி பிரதமர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூர் பகுதியில் உலகத் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.

Udhayanithi Stalin

மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 13.05 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், நர்சிங் கல்வி வளாகம், நிர்வாக மற்றும் ஆடிட்டோரியம் கட்டிடங்கள், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மொத்தம் 13 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மருத்துவமனை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.

இரண்டாம் கட்டத்தில் 10.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகங்கள், இயக்குநர் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தமாக 29 கட்டிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான 3டி மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இந்த மாடல் வீடியோ வெளியிட்ட போதே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை முடிவடைந்தும், இன்னும் திறக்கப்படவில்லை. இன்னும் பெயிண்டிங் பணிகள் நடந்து வருகிறது. இதன்பின் மருத்துவமனைக்கு தேவையான இயந்திரங்கள் வாங்கப்பட்டு எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பிரதமர் மோடி இன்று சென்னை வந்திருக்கிறார். அவர் இனிமேல் அடிக்கடி தமிழ்நாடு வருவார். அப்போது அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கூறினால், அதற்கு ஒரு விடிவு காலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+