துணை முதல்வராகும் உதயநிதி.. செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் அமைச்சராக நாளை பதவியேற்பு! ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக நாளை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் நாளை நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழா என்பது நாளை மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி இன்று இரவில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதன்படி நாளை மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை அமைச்சரை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைய உள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த பொறுப்புடன் கூடுதல் இலாகாக்களுடன் துணை முதல்வராக உள்ளார். செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 4 பேரும் நாளை மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் புதிய பொறுப்பை ஏற்க உள்ளனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவர்கள் 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விழாவின்போது 6 அமைச்சர்களின் இலாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் , ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் நிதித்துறையுடன் சேர்த்து சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை பொறுப்பையும் ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications