கல்லூரிகளிலும் மும்மொழிக்கொள்கை! வெளியான அதிரடி உத்தரவு! யுஜிசிக்கு அவ்வளவு அதிகாரம் இருக்கிறதா?
சென்னை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையில், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வியில் மட்டுமல்லாது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், யுஜிக்கு அவ்வளவு அதிகாரம் எல்லாம் கிடையாது என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
முதலில் புதிய கல்விக் கொள்கை என்றால் என்ன? அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது என்ன என்பதை பார்ப்போம். நாடு முழுவதும் கல்வியை எப்படி கொடுப்பது? பாடத்திட்டங்கள் என்ன? தேர்வு முறைகள் போன்ற விஷயங்கள் கல்விக் கொள்கையில்தான் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 1986ம் ஆண்டு தொடங்கி பின்பற்றப்பட்டு வந்த பழைய கல்விக் கொள்கை, கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசால் மாற்றி அமைக்கப்பட்டது. கல்வியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறோம் என்று சொல்லிதான் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை 2020-ஐ கொண்டு வந்தது.

அதில் பல அம்சங்கள் சர்ச்சைக்குரியதாய் இருந்தன. குறிப்பாக, மும்மொழிக்கொள்கை. தமிழ்நாடு கடந்த 1968ம் ஆண்டு முதல் இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றி வருகிறது. அதாவது, தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் முதன்மை மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது திடீரென மூன்றாவதாக ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சொல்வதுதான் பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்கிறது. மூன்றாவது மொழி எனில் பிரெஞ்சு, ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன் போன்ற மொழிகள் கிடையாது. இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு என இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றைதான் கற்க வேண்டும்.
"மூனாவதா ஒர மொழியை கத்துக்கிட்டாதான் என்னவாம்?" என்று பாஜகவினர் கேள்வி எழுப்ப, "அதெல்லாம் முடியாது. இரண்டு மொழியை வச்சுக்கிட்டே நாங்க சர்வதேச அளவில் முன்னேறியிருக்கிறோம். மூணாவது மொழியை கத்துக்க சொல்வது, கல்வித் தரத்தை மேம்படுத்தாது என்பது ஆய்வு பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்கிறது" என்று ஆய்வு அறிக்கைகளையும் தமிழ்நாட்டு கல்வியாளர்கள் முன்வைக்கிறார்கள். இப்படி இருக்கையில்தான் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மும்மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.
யுஜிசிக்கான வேலை இது கிடையாது. கல்விக்கான காசை கொடுத்தோமா, தேர்வுகளை நடத்துனோமானு.. இருக்கனும். கல்வி மத்திய-மாநில அரசுகளின் பொது பட்டியலில் இருக்கின்றன. எனவே எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று தமிழ்நாடு அரசு தெளிவாக கூறியுள்ளது. சபாநாயகர் அப்பாவு, "நிதி விவகாரங்களில் மட்டுமே யுஜிசிக்கு அதிகாரம் இருக்கிறது. மற்றபடி, கொள்கை உத்தரவை யுஜிசி பிறப்பிக்க அதிகாரம் இல்லை" என்று கூறியுள்ளார். இது குறித்து உச்சநீதிமன்றம் பல முறை தனது உத்தரவுகளில் குறிப்பிட்டிருக்கிறது.
உதாரணமாக கடந்த 2008ம் ஆண்டு, அசோக்குமார் தாகூர் vs மத்திய அரசு என்கிற வழக்கில், யுஜிசிக்கான அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. யுஜிசிக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிகாரம் இருக்கிறது. அதாவது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் குறைந்தபட்ச கல்வி தரத்தை நிர்ணயித்தல், தேர்வுகளை நடத்துதல் போன்றவற்றிக்கு யுஜிசிக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், 'கொள்கை' சார்ந்த விஷயங்களில் யுஜிசிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது.
அப்படி இருக்கையில் எப்படி, மும்மொழி குறித்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட முடியும்? என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications