அப்ரூவ்ட் நிலம்.. அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறையில் அதிரடி.. தமிழக வீட்டு வசதித்துறை அறிவிப்பு
சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் மீண்டும் தரப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இதுகுறித்து நகர ஊரமைப்பு இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், கடந்த 2016, அக்.20 அல்லது அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைமற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்தாண்டு பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

விண்ணப்பம்: இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்தஇறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த அடுத்த வருடம் பிப்ரவரி 29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு வீட்டுவசதித்துறை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
அரசாணை: "அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதியப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இவற்றில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு செய்து, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம்.
மீண்டும் அனுமதி: எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ளக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவித்துள்ளார். அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் தரப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications