அப்ரூவ்ட் பிளாட்.. அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. வந்தது அதிரடி
சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம், சென்னை ஹைகோர்ட் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்திருந்தது.. அதாவது, சென்னையை சேர்ந்த அருண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வரன்முறை செய்யாத அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அரசாணை: மேலும், பொதுவாக வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் அரசின் செலவில் சாலைகள் மற்றும் மேம்பாட்டு வசதிகளை செய்யக் கூடாது என்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அரசாணை பிறப்பித்திருந்தும்கூட, இந்த உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன. அதனால், தமிழகம் முழுவதும் வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் எந்த மேம்பாட்டு வசதியும் செய்யக் கூடாது என்ற அரசின் உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, சென்னை ஹைகோர்ட்டில் நடந்தது.. அப்போது தலைமை நீதிபதி கங்கா புர்வாலா தலைமையிலான அமர்வு, "அரசு ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதற்கான வழிமுறைகளையும் வகுக்கிறது. அதைமீறி சில அதிகாரிகள் தவறாகச் செயல்படுகிறார்கள். இதை ஏற்க முடியாது. அந்த அதிகாரிகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
வீட்டுமனைகள்: ஆக, வரன்முறை செய்யாத மனைகள் எந்த அடிப்படை வசதிகளையும் இனி பெற முடியாது.. அதேசமயம், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வாங்கும்போது, பொதுமக்கள் கவனமாகவும் இருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மனைப்பிரிவுகள்: இதுகுறித்து நகர ஊரமைப்பு இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், கடந்த 2016, அக்.20 அல்லது அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைமற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்தாண்டு பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்தஇறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications