அப்ரூவல் இல்லாத நிலம்.. தண்டத்தொகை? திருவண்ணாமலையில் பெயிராவின் முப்பெரும் விழா.. தீர்வு கிடைக்குமா?
சென்னை: பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஆகச்சிறந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், பெயிராவின் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்குதல் என முப்பெரும் விழாவை அதிரடியாக அறிவித்திருக்கிறது பெயிரா கூட்டமைப்பு. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு பங்கேற்க உள்ள இந்த திருவண்ணாமலை மாநாடு குறித்து, முக்கிய தகவலையும் பெயிரா வெளியிட்டிருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பெயிரா கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது:

பெயிரா கூட்டமைப்பின் பிரம்மாண்டமான மாநாடு, திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. "முப்பெரும் விழா" நிகழ்ச்சியாக பரிணமிக்க போகும் இந்த மாநாடு, எதிர்வரும் 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில், திருவண்ணாமலை மாநகரம், தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள "மாதவி பன்னீர்செல்வம்" மஹாலில், FAIRA அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் A.நரேஷ்சந்த் தலைமையில் நடைபெறுகிறது.
பிரம்மாண்ட மாநாடு: இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பில் தேசிய மற்றும் மாநில குழுக்களில் பொறுப்பாளர்களாக இருக்கிற கட்டுனர்களும், (பில்டர்ஸ்) வீட்டுமனை அபிவிருத்தியாளர்களும், (லே-அவுட் புரமொட்டர்ஸ்) ஆர்கிடெக்ட், (வடிவமைப்பாளர்களும்) இன்ஜினியர்ஸ் (கட்டுமான பொறியாளர்களும்), அதேபோன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இருந்து மாநில, மாவட்ட, தாலுக்கா குழுக்களின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இம் மாநாட்டிற்கு கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
பாராட்டு பத்திரம்: கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் ஆகச்சிறந்த அரும்பெரும் திட்டங்களையும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மகத்தான திட்டங்களையும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள மைய - மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பது, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்குதல் என இந்த முப்பெரும் விழாவை முன்னெடுத்துள்ளது பெயிரா கூட்டமைப்பு.
கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் சம்பந்தப்பட்ட வீட்டுவசதி துறை, மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி, பதிவுத்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் இன்னும் கொண்டு வர வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட திருத்தங்கள், மாற்றியமைக்க வேண்டியவைகள், எளிமைப்படுத்த வேண்டியவைகள் குறித்தும், ஆக்கபூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றி, மகத்தான தீர்மானங்களையும், மைய - மாநில அரசுகளுக்கு முன்வைத்தும் FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி இம்மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியை அரசு கவனத்தில் கொள்ளும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த உறவுகளும் மிகத் துடிப்புடனும், கவனமுடனும் முன்னெடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
பொறுப்பாளர்கள்: மிகச் சிறப்பான முறையில் மாநாடு நடத்திட வேண்டும் என ஃபெயிரா கூட்டமைப்பின் தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்களின் மேற்பார்வையில், முப்பெரும் விழாவுக்கான பணியில் மும்முரமாகி வருகிறது" என டாக்டர் ஆ.ஹென்றி தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெயிரா நடத்த போகும் இந்த மாநாடு தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், வருவாய்த்துறை, பதிவுத்துறை, வீட்டுவசதி துறை, மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சி உள்ளிட்ட துறைகளில் நிலவும் பல்வேறு விஷயங்கள் இந்த மாநாட்டில் விரிவாக அலசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கைகள்: இந்த மாநாட்டில் சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது. குறிப்பாக, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தி பொதுமக்கள் விண்ணப்பிக்கும் திட்டங்களை விரைவில் பதிவு செய்து உத்தரவிட கூடிய வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பெயிரா வலியுறுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, பொதுமக்கள் தங்களின் திட்டங்கள் குறித்த கோப்புகளை விண்ணப்பித்து, ஒழுங்குமுறை ஆணையத்தால் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளவைகளுக்கு தண்டத்தொகையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கையை விடுத்து வருகிறது.
எதிர்பார்ப்பு: அந்தவகையில், இந்த முப்பெரும் விழாவில் மிக முக்கிய முடிவுகளும், திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், திருவண்ணாமலையில் நடைபெற போகும் பெயிரா மாநாட்டை எதிர்நோக்கி பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications