அப்ரூவல் இல்லாத நிலம்.. வீட்டுமனை பிரிவு! மொத்த பேரின் கவனத்தை திருப்பிய பெயிரா! கோட்டைக்கு கோரிக்கை
சென்னை: மலைப்பகுதிகளின் அருகிலுள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் கால நீட்டிப்பு செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்திருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.. FAIRA கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சிறப்புரை: தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார், தேசிய செயற்குழு தலைவர் வினோத் சிங் ரத்தோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் இவைகள்தான்:
"கோவை மாவட்டத்தில் (டிடிசிபி) கோவை புறநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைமுறைப்படுத்தியுள்ள "முழுமை திட்டம்" வரைவு குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று, அதன் அடிப்படையில் மீண்டும் சரியான நில வகைபாட்டினை முழுமை திட்டத்தில் சரி செய்து விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், அதுவரை முழுமை திட்ட பகுதிக்குள் புதிய வீட்டுமனை பிரிவு அனுமதிக்கோரி விண்ணப்பிக்கும் நிலங்களுக்கு குடியிருப்பு மனை வகைபாடாக கருதி அனுமதி வழங்கிட வேண்டும் .
புதிய அறிவிப்பு: 2024-2025 ஆண்டு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், 2500 சதுரடி பரப்பளவு கொண்ட மனைகளில் 3,500 சதுரடி வரை கட்டப்படும் (தரைதளம் மற்றும் முதல் தளம்) கட்டுமான திட்டங்களுக்கு புதிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.
இதில் பொதுமக்கள் விதிமீறல் கட்டடம் எதுவும் கட்ட மாட்டோம் என சுய சான்றளித்து அதற்குண்டான கட்டணங்களை முறையாக செலுத்தும் பட்சத்தில் உடனடியாக அங்கீகாரம் பெற்று கொள்ளும் வகையில் (Instant Approval) திட்டமிருந்தது. இதனை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.
மலைப்பகுதிகள்: மலைப் பகுதியின் எல்லையிலிருந்து 500 மீட்டருக்கு வெளியில் உள்ள நிலங்களை கிராமம் அடிப்படையில் இல்லாமல் புல எண்கள் வாரியாக வகைப்படுத்தி HACA தடையின்மை சான்று பெறுவதற்கு ஏதுவாகவும் வீட்டுமனை பிரிவாக ஏற்படுத்துவதற்கு ஏதுவாகவும் அரசு வழிவகை செய்ய வேண்டும்,
சாலைகள், மனைகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள மெட்ரிக் மீட்டர் அளவு மற்றும் சதுரடி அளவுகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இரண்டிற்கும் பொதுவாக சமன் செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
மேல்முறையீடுகள்: கோவை புறநகர் வளர்ச்சி குழுமத்தில் (CUDA) அனுமதிகளை விரைந்து வழங்கவும், சிக்கல்களை களைந்து சீர்தூக்கி செம்மைப்படுத்தவும், எளிமைபடுத்தவும், மேல்முறையீடு மனுக்கள் மீது விரைந்து தீர்வுகள் ஏற்படுத்தவும் குழுக்கள் அமைத்து அதில் எங்கள் FAIRA கூட்டமைப்பின் சார்பில் பொறுப்பாளரை உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் புதிய வீட்டுமனை பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்சம் அணுகு சாலை ஆறு மீட்டர் என குறைத்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்
வணிக வளாகப்பகுதிகள்: மேலும் கோவை மாவட்டத்தில் அடர்த்தியாக வளர்ந்து வரும் நகரங்களில் குடியிருப்பு பகுதிகளையும், வணிக வளாகப் பகுதிகளையும் கண்டறிந்து தொடர் கட்டிடப் பகுதியாக (CBA) மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள மனைகளில் வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே வகைபாடு மாற்றத்திற்குண்டான கட்டணத்தை செலுத்தி வணிக பயன்பாட்டிற்கு கட்டட திட்ட அனுமதி பெறும் வகையில் வழிவகைசெய்ய வேண்டுகிறோம்.
அபிவிருத்தி கட்டிட விதிகள்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் TNCDBR-2019 இன் படி தற்போதுள்ள விதிகளில் சிறிய அளவு மனைகளில் போதிய தளபரப்பளவு (FSI) அடைய முடியவில்லை. இதனை மாற்றியமைத்து கட்டடத் திட்ட அனுமதியில் போதிய தள பரப்பளவை அடையும் வகையில் TNCDBR (2019) இல் திருத்தம் கொண்டு வந்து மாற்றியமைக்க வேண்டுகிறோம்.
மனைப் பிரிவு, நில வகைப்பாடு மாற்றம் மற்றும் கட்டிட திட்ட அனுமதியை பெறுவதற்கு தற்போது 28 க்கும் மேற்பட்ட துறைகளை அணுக வேண்டியுள்ளது. இதில் சுமார் 24 துறைகள் ஒற்றைச் சாளர முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும். தாமாக கோப்புகள் நகர்வதில்லை. இதற்கு கால நிர்ணயம் செய்து விரைவில் அனுமதி வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
ஊரக உள்ளாட்சிகள்: அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றை சாளர முறை திட்டத்தில் இறுதி ஒப்புதலையும் இணையதளம் வாயிலாகவே 15 தினங்களுக்குள் (AUTOMATIC APPROVAL OR DEEMED APPROVAL) வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
ஒரு ஹெக்டேருக்குள் அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக சலுகை பெறும் வகையில், ஒரே விண்ணப்பதாரர் தமது பெயரில் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தையும், அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டுகிறோம்.
மலைப்பகுதிகள்: மலைப்பகுதிகளின் அருகில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் அரசாணை எண் 65/2020 ஐ மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்திட வேண்டும்...
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் பொது கட்டிட விதிகள் 2019 இல் உள்ள பல விதிகள் மலைப்பகுதிகளுக்கு பொருந்தவில்லை. ஆகவே மலைப் பகுதிகளுக்கென தனியாக புதிய கட்டிட விதிகளை உருவாக்கிட வேண்டும்..
ஏற்கனவே நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் (DCR) அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழகம் முழுவதும் டிடிசிபி அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் உள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். இதனை குடியிருப்பு மனையாக தற்போது மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, dtcp புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
நில பயன்பாடுகள்: அப்படி திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில் அப்பாவி பொதுமக்களின் மனுவினை நிராகரிக்கின்றனர். அரசு இதனை கவனத்தில் கொண்டு பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை புதிய விதிகளின்படி திறந்தவெளியில் நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல் நில பயன்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
புதிய கட்டுமான திட்டங்களுக்கு 1A மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிற மின் மீட்டர் பற்றாக்குறையை போக்கி 15 தினங்களுக்குள் மின் இணைப்பை வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
கிராம நத்தம் நிலம்: கிராம நத்தம் பட்டா வகைப்பாடு சம்மந்தமான தகவல்கள் தற்பொழுது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இது குறித்த சரியான விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகிறோம்" என்று அந்த தீர்மானத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications