தோழியுடன் சேர்ந்து தூங்கிய பெண்.. மிட் நைட்டில் கேமராவில் பார்த்தால் யாரது? ஆடிப்போன சென்னை போலீஸ்
சென்னை: நகை திருட்டு என்பது சர்வ சாதாரணமாக தமிழகத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே தங்கம் விற்கும் விலையில், நகை வாங்குவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமையில் ஏழை, எளிய மக்கள் உள்ளனர்.. இப்படியான சூழலில் நகைகளை திருடுவதும், கொள்ளையடிப்பதும் என திருட்டு சம்பவங்கள் பெருகி விடுவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதோ சென்னையில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்.
சென்னை கே.கே.நகர், ஆற்காடு சாலையில் வசித்து வருகிறார் ஜெயலட்சுமி.. இவருக்கு 34 வயதாகிறது.. டிவி துணை நடிகையாக ஜெயலட்சுமி உள்ளார்..

நடிகையின் தங்க நகை
இவரது வீட்டில்தான் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் தேதி, ஜெயலட்சுமி தனது வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது, சில தங்க சங்கிலிகள், ஒரு டாலர், சில மோதிரங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இதனால் வீட்டில் எல்லா இடங்களிலும் தேடினார்.. எங்கேயுமே அந்த நகைகளை காணவில்லை..இதனால் உடனடியாக அவர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.. நடிகையின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. மேலும், கைரேகை ஆய்வுகள் மூலமும் விசாரணை துரிதமானது.. அப்போதுதான், ஜெயலட்சுமியின் தோழியான மோனிஷா என்பவர் கேமராவில் சிக்கினார்..
கேமராவில் தோழி
ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா.. இவருக்கு 30 வயதாகிறது.. இதையடுத்து, போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். உடனடியாக அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை ஜெயலட்சுமி போலீசாரிடம் சொன்னார்..
அதாவது மோனிஷாவும், ஜெயலட்சுமியுடன் சினிமா துறையில் பணிபுரிந்து வருபவராம்.. அதனால் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.. அப்படித்தான், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெயலட்சுமியின் வீட்டில் மோனிஷா தங்கியிருக்கிறார்.. அப்போது பீரோவில் நகைகள் வைத்திருந்தது மோனிஷாவுக்கு தெரியவந்துள்ளது..
பீரோ நகைகள் - 7 சவரன் நகை
அன்றைய இரவே, பீரோவில் இருந்த நகைகளை திருடி பதுக்கி வைத்து கொண்டாராம் மோனிஷா.. பிறகு மறுநாள் காலையில் எதுவும் தெரியாதது போல தூங்கி எழுந்து, அந்த நகையை தன்னுடைய வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டாராம்..
இவ்வளவு விவரங்களையும் போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னதையடுத்து, மோனிஷாவிடமிருந்து 7.05 கிராம் எடை கொண்ட தங்க செயின், ஒரு டாலர், இரண்டு மோதிரங்கள் மற்றும் 5 மூக்குத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மோனிஷாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தற்போது ஜெயிலில் அடைத்துள்ளனர்.
சினிமா துறையில் பணிபுரியும் பெண் தன்னுடைய நெருங்கிய தோழியின் நம்பிக்கையை சிதைத்து, அவரது வீட்டிலிருந்தே நகைகளை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கேகே நகர் பகுதி மட்டுமல்லாமல் சின்னத்திரை வட்டாரத்திலும் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications