வீடியோ கால் ஆன் செய்துவிட்டு காதலி செய்த செயல்.. சென்னை இளம் வழக்கறிஞரால் ஆடிப்போன காதலன்
சென்னை: திருப்போரூர் அருகே நடந்த இளம் பெண் வழக்கறிஞரின் சம்பவமானது, அப்பகுதி மக்களையே அல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையின் உச்சிக்குச் செல்லத் தயாராக இருந்த நிலையில், தனது கனவுகளோடு போராடிய இந்த பெண் வழக்கறிஞர் அனீஷா எடுத்த முடிவு, அத்தனை பேரையும் கண்கலங்கச் செய்துள்ளது. என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜசேகர் என்பவரின் மகள்தான் அனீஷா, 25 வயதாகிறது.. கடந்த 5 வருடங்களாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இதற்காக ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, வந்தார்.. சமீபத்தில் தன்னுடைய படிப்பை வெற்றிகரமாக முடித்த அனீஷா, பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
வீடியோ கால் லைவ்
இப்படி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க தயாராகி கொண்டிருந்தார் அனீஷா.. மேலும், உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கவனிக்கும் வகையில், சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஒரு ஜிம்மிற்கும் அனீஷா தினமும் சென்று வந்துள்ளார்.. அங்குதான் நித்தியானந்தம் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இருவருமே நெருங்கி பழகி வந்துள்ளனர்..
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, அனீஷா நித்தியானந்தத்திற்கு வீடியோ கால் செய்து, தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்லி உள்ளார்.. பிறகு உடனே வீடியோவை அப்படியே ஆன் செய்தபடியே வைத்துவிட்டு, தன்னுடைய ரூமில் இருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டு நம்பர் தெரியல
இந்த காட்சியை வீடியோவில் பார்த்த நித்தியானந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக அனிஷா தங்கியிருக்கும் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டிக்கு தகவல் தந்துள்ளார்.. ஆனால், செக்யூரிட்டிக்கோ அனிஷா தங்கியிருக்கும் வீடு எது என தெரியாததால், அப்பார்ட்மென்ட்டின் ஒவ்வொரு வீடாக செக் செய்து பார்த்துவிட்டு, இறுதியாக அனீஷா தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்துள்ளார்..
பிறகு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் அனீஷா சடலமாக கிடந்துள்ளார்.. பிறகு உடனடியாக கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அனீஷாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனீஷாவின் இறப்பு செய்தி அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளின் மரண செய்தியை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுத காட்சிகள் அனைவரின் நெஞ்சையும் கரைய வைத்தது..
சமாதானம் செய்ய முயன்ற காதலன்
போலீசார் வழக்கு பதிவு செய்து, அனீஷா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து அவரது காதலர் நித்தியானந்தம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனீஷா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.. வீடியோகாலில் தற்கொலை செய்ய போவதாக அனீஷா சொன்னதுமே, அவரை காதலன் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.. ஆனால் அனீஷா பிடிவாதமாக லைவ் வீடியோவிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார்..












Click it and Unblock the Notifications