Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசையாமல் கிடந்த ரோஸி.. கேஷூவலா இரவெல்லாம் பக்கத்தில் படுத்து தூங்கிய கணவர் சத்யராஜ்! ஆடிப்போன சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மது பழக்கம் ஒரு மனிதனின் சுயகட்டுப்பாட்டை அழித்து, கோபம் மற்றும் வன்முறையை அதிகரிக்கிறது. அதனால் குடும்பத்தில் நம்பிக்கை, அமைதி, பாதுகாப்பு அனைத்தும் சிதறி விடுகின்றன. இறுதியில் குடும்ப உறவுகள் முறிந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்பை சந்திக்கிறார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை போரூர் ஆர்.ஈ நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ்.. இவருக்கு 40 வயதாகிறது.. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. அவரது மனைவி ரோசி. இந்த தம்பதிக்கு சூர்யா (9), நித்யா (7) பிள்ளைகள் உள்ளனர்.

Chennai Rosy Sathyaraj

தினமும் காலை வேலைக்கு செல்லும் சத்யராஜ், சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டுதான் வருவாராம்.. ஒருகட்டத்தில் மதுவுக்கு அடிமையாகியும் உள்ளார்..

தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததுமே, ரோஸியுடன் தகராறு செய்வாராம்.. எப்போது பார்த்தாலும் மனைவியின் நடத்தையில் சத்யராஜூக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்குமாம்.. இதுவே தம்பதிக்குள் தகராறும் வாக்குவாதமும் அதிகரிக்க காரணமாக இருந்து வந்துள்ளது.

சுவற்றில் மோதிய ரோஸியின் தலை

24ம் தேதி மாலை, வழக்கம் போல் மது அருந்திவிட்டு சத்யராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் குழந்தைகள் தனி ரூமில் தூங்கி கொண்டிருந்தனர்.

ரோஸியை பார்த்ததுமே சத்யராஜ் திடீரென கோபப்பட ஆரம்பித்துவிட்டாராம்.. பிறகு ரோஸியை கடுமையாக தாக்கி உதைத்துள்ளார். பிறகு ஆத்திரம் அதிகரித்த நிலையில் ரோஸியின் தலையை பிடித்து சுவரில் பலமுறை மோதியிருக்கிறார்.. இதில், ரோஸியின் மண்டை உடைந்து, ரத்தம் அதிகமாக வெளியேறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். சிலமணி நேரங்களில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

மறுநாள் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் குழந்தைகள் இருவரும் தூங்கி எழுந்து, அருகிலுள்ள தங்கள் பெரியம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.. அப்போது இருவரும் தங்கள் பெரியம்மாவிடம், "அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நைட் முழுக்க சண்டை.. அம்மா இன்னும் தூங்கி எழுந்திருக்கவில்லை, அப்பாவையும் வீட்டில் காணவில்லை" என்று சொல்லி உள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது பெரியம்மா, உடனடியாக ரோஸியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.. அப்போதுதான் ரோஸி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அலறி துடித்தார்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்தார்..

விரைந்து வந்த போலீஸார், ரோஸியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டபோதுதான், சத்யராஜ் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.

சடலத்துடன் சேர்ந்து தூங்கிய சத்யராஜ்

தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு மாயமான சத்யராஜை போலீசார் தற்போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.. சத்யராஜிடம் விசாரணையும் மேற்கொண்டபோதுதான், கொலையை தான் செய்ததாக ஒப்புக் கொண்டாராம்.

போதையில் ரோஸியின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி மோதியதில், சம்பவ இடத்திலேயே மயங்கி இறந்துவிட்டார் ரோஸி.. ஆனால், இது தெரியாமல், ரோஸியின் சடலம் அருகிலேயே இரவெல்லாம் படுத்து தூங்கிவிட்டாராம் சத்யராஜ்.. மறுநாள் காலையில் போதை தெளிந்து, கண்விழித்து பார்த்தபோதுதான், ரோஸி இறந்தது தெரியவந்துள்ளது.. இதனால் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தபோதே, வீட்டிலிருந்து தப்பிச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம்.

பரிதாபம் 2 குழந்தைகள்

இதையடுத்து தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்து வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு சம்பவத்திற்கு முன் நடந்த தகராறுகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறார்கள்..

மதுபழக்கத்தால் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் எச்சரித்தபடி உள்ள நிலையில், இப்போது தாய், தந்தை இல்லாமல் அந்த 2 குழந்தைகளும் கண்ணீரில் தவித்து வருகின்றன..

ஆகமொத்தம், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது நமக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது போலும்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+