605,180,000,000 கோடி அநாமத்தா போச்சு.. ரிசர்வ் வங்கிக்கு போன உங்கள் பணம்! திரும்பப் பெறுவது எப்படி?
சென்னை: இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தற்போது இந்திய ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) மாற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளில் இருந்து உரிமை கோரப்படாமல் இருந்த மொத்த வைப்புத்தொகை ரூ.60,518 கோடி அளவுக்கு சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நாம் பெரும்பாலும் சேமிப்பு கணக்கு, நிலையான வைப்பு (FD), மீளக்கூடிய வைப்பு (RD) போன்ற கணக்குகளில் பணத்தை சேமித்து வைத்திருப்போம். ஆனால் பல காரணங்களால் அந்த கணக்குகள் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் போகும் சூழல் ஏற்படுகிறது.

குறிப்பாக, கணக்கு வைத்த நபர் காலமானால், முகவரி மாற்றம் ஏற்பட்டால், குடும்பத்தினர் அந்த கணக்கு பற்றிய தகவலை அறியாத நிலை ஏற்பட்டால் அல்லது வங்கிகள் இணைக்கப்பட்டு மாற்றங்கள் ஏற்பட்டால், அந்த கணக்குகளில் உள்ள பணம் அப்படியே பயன்படுத்தப்படாமல் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி
இவ்வாறு நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பணத்தையே "உரிமை கோரப்படாத வைப்புத்தொகை" என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் இருக்கும் கணக்குகள் 'செயல்படாத கணக்குகள்' (Inactive Accounts) எனக் கருதப்படுகின்றன.
உரிமை கோரப்படாத டெபாசிட்
அதேபோல், பத்து ஆண்டுகள் கடந்தும் உரிமை கோரப்படாத நிலையில் இருக்கும் பணம் 'உரிமை கோரப்படாத டெபாசிட்' என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை பணங்கள் பின்னர் ரிசர்வ் வங்கியின் 'டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி' (Depositor Education and Awareness - DEA Fund) என்ற நிதிக்குள் மாற்றப்படுகின்றன.
பங்கஜ் சவுத்ரி
இருப்பினும், அந்த பணத்தின் உரிமை முழுமையாக வங்கி வாடிக்கையாளருக்கோ அல்லது அவரின் சட்டபூர்வ வாரிசுகளுக்கே இருக்கும். அதாவது, பணம் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டாலும், அது அரசுக்கு போய்விடாது; உரிமையாளர் அல்லது வாரிசுகள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அந்த பணத்தை மீண்டும் பெற முடியும். இந்நிலையில், இந்த விவரம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி 2026 ஜனவரி இறுதி வரையிலான நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் இருந்து DEA நிதிக்குள் மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடி என தெரிவித்தார்.
பரஸ்பர நிதி
இதோடு மட்டும் இல்லாமல், காப்பீட்டு துறையிலும் உரிமை கோரப்படாத தொகைகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2026 பிப்ரவரி இறுதி நிலவரப்படி, காப்பீட்டாளர்களால் உரிமை கோரப்படாத காப்பீட்டு தொகை ரூ.8,973.89 கோடி அளவுக்கு இருப்பதாகவும், அதேபோல் பரஸ்பர நிதி (Mutual Fund) முதலீட்டாளர்களால் உரிமை கோரப்படாத தொகை ரூ.3,749.34 கோடி அளவுக்கு இருப்பதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி பணம் மீட்பு
இந்த அளவுக்கு பணம் உரிமை கோரப்படாமல் இருப்பது வங்கி மற்றும் நிதி அமைப்புகளுக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால், உரிமையாளர்களை விரைந்து அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பழைய கணக்குகளின் விவரங்களை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைப்பது, வாடிக்கையாளர்களுக்கு எளிதான விண்ணப்ப நடைமுறைகள் உருவாக்குவது போன்ற பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழைய வங்கி கணக்குகள்
பொதுமக்கள் தங்களிடம் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் பழைய வங்கி கணக்குகள் உள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கணக்குகள் இருந்தால், உடனடியாக அந்த வங்கியை தொடர்புகொண்டு கணக்கை மீண்டும் செயல்படுத்துவது அல்லது தேவையான பணத்தை திரும்ப பெறுவது நல்லது.
வங்கி பணம் மீட்பு
ரூ.60 ஆயிரம் கோடியை கடந்த அளவுக்கு பணம் உரிமை கோரப்படாமல் இருப்பது மக்கள் விழிப்புணர்வு குறைவின் காரணமாக உருவான பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த பணம் முற்றிலும் காணாமல் போய் விடும் அபாயம் இல்லை. உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications