Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதறிப்போன டிரம்ப்.. நிலைமை கையைமீறிடுச்சு.. இந்தியாவிற்கு அவசரமாக வரும் அமெரிக்க தலை! ஏன்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் அவசர அவசரமாக இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார்.

ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் அடைந்த நிலையில், அவர் அவசரமாக இந்தியா வருகைபுரிய உள்ளார். டிசம்பர் 7 முதல் 11 வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

CIA Putin

டெல்லியில், ஹூக்கர் மூத்த இந்திய அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை செய்வார். வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இரண்டு நாட்டு பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் அரசியல் மோதல்கள் பற்றி ஆலோசனைகளை மேற்கொள்வார். பெங்களூரில் , ஹூக்கர் ISRO-வுக்கும், விண்வெளி, எரிசக்தி, தொழில்நுட்பத் துறைத் தலைவர்களையும் சந்திப்பர். அமெரிக்கா-இந்தியா ஆராய்ச்சிப் பங்களிப்புகளில் புதுமைகளை மேம்படுத்தி, விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் ஆராய்வார். இந்தியா ரஷ்யாவின் நெருக்கம் குறித்தும் இவர் ஆலோசனைகளை மேற்கொள்வார்.

இந்தியா ரஷ்யா நெருக்கம் - அமெரிக்கா பதற்றம்

ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள பயணம் மேற்கு உலகத்தை பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இது ஒரு சாதாரண பயணத்தை விடவும், ராஜதந்திர நிகழ்வை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை எந்த ஒரு தரப்பிற்கும் அடிபணியாது என்பதை அமெரிக்காவிற்குச் சத்தமாக நினைவூட்டுவது போல இது அமைந்துள்ளது. முக்கியமாக இந்தியா - ரஷ்யா உறவை முறிக்கும் விதமாக டிரம்ப் தீவிரமாக முயற்சிகளை எடுத்த நிலையில், அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக மோடி - புடின் நெருக்கமாகி உள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடினுக்கு அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்டமான சிவப்பு கம்பள வரவேற்பு, நீண்ட கைகுலுக்கல்கள் மற்றும் நட்பு ரீதியான புன்னகை ஆகியவை இரு தலைவர்களுக்குமிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது. இருவரும் மிக நெருக்கமாக இணைந்துள்ளனர்.

சர்வதேச நெருக்கடிக் காலங்களில் மலிவான கச்சா எண்ணெய் விநியோகம் முதல், எஸ்-400, எஸ்-500 போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் வரை பல உதவிகளை செய்திக்கு ரஷ்யா இந்தியாவுக்குப் பக்கபலமாக இருந்துள்ளது. அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக இந்தியா - ரஷ்யா நெருக்கமாக உள்ளது. மாஸ்கோ இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர் ஆதரவு தருகிறது. இந்த ஒத்துழைப்பு இந்தியாவுக்கு பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமித்ததுடன் சர்வதேச அரசியல் ரீதியாக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.

மறுபுறம், வாஷிங்டன் எப்போதும் நம்பகமான நண்பனாக இருந்ததில்லை. டிரம்ப் அதிபராக இந்தியாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார். அவரது கடுமையான கருத்துகள், வர்த்தக மோதல்கள், அதிக வரி விதிப்புக் கோரிக்கைகள், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்த அழுத்தங்களும் இந்தியா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் அழுத்தம்

அமெரிக்க அமைப்புகள் மாஸ்கோவுடன் உறவுகளைக் குறைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படிப்பட்ட நிலையில்தான் புடின் உடன் மோடி நெருக்கமாகி உள்ளார். CIA போன்ற அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்த வருகையை தீவிரமாக் கவனிப்பதாகப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் நம்பிக்கையைப் பெறுபவர்கள் உலக அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்துவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமான இந்தியா, ஆசியாவின் அதிகாரச் சமநிலையின் மையத்தில் உள்ளது. இந்தியாவை இழப்பது வாஷிங்டனுக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமையும். அதுவும் ரஷ்யா - இந்தியா ஒன்றாக இணைவது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

ரஷ்யாவிற்கு மகுடம்

டெல்லியில் புடினுக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்பு, ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முயன்றவர்களுக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா இந்தியாவை அழுத்தம் கொடுக்க முயல்கிறது. கட்டுப்படுத்த முயல்கிறது. ஆனால் ரஷ்யா அதன் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மரியாதையின் மூலம் இந்தியாவின் மனதை வெல்கிறது. இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறது. இது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில்தான் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் அவசர அவசரமாக இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+