இனி தினமும் 3 முறை வாட்டர் பெல்.. பள்ளிகளில் வரும் புதிய நடைமுறை.. பின்னணியில் உள்ள காரணம்!
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்கு வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி காலை, மதியம் மற்றும் மாலை என்று 3 வேளைகளில் வாட்டர் பெல் அடிக்கப்படவுள்ளது. எந்தெந்த நேரத்தில் இந்த வாட்டர் பெல் அடிப்படவுள்ளது என்பதை பார்க்கலாம்.
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பினாலும், பெரும்பாலான குழந்தைகள் பாதி வாட்டர் பாட்டிலை கூட குடிக்க மாட்டார்கள். சாப்பிடும் நேரத்தை கடந்து குழந்தைகள் வாட்டர் பாட்டில் பக்கமே செல்வதில்லை. சுமார் 8 மணி நேரத்திற்காக மேலாக பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு, தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.

இதன் காரணமாக வெளிநாடுகளில் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் என்று அறிமுகம் செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வாட்டர் பெல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கேரளாவில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். வாட்டர் பெல் திட்டம் என்பது குழந்தைகள் காலை, மதியம் மற்றும் மாலை என்று 3 வேளைகளிலும் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்தாகும். அதற்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்படும்.
ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வகுப்புச்சூழல் பாதிக்கப்படாத வகையில் ஒரு நாளில் 2 முதல் 3 முறை வாட்டர் பெல் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி காலை 11 மணியளவிலும், மதியம் 1 மணியளவிலும், மாலை 3 மணியளவிலும் வாட்டர் பெல் அடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கற்றல் திறன் பாதிக்கப்படும். இதனால் வாட்டர் பெல் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் போதுமான அளவி தண்ணீர் குடிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications