வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப் பெரிய தேர்தல் பிரச்சினை.. ரகுராம் ராஜன்
சென்னை: நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுனருமான ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய ரகுராம் ராஜன் அவரது பணிக்காலத்தில் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வந்தார். பாஜக அரசு பொறுப்பேற்றதும் அவர் தனது பதவியை விட்டுவிட்டு வெளியே வந்தார். தற்போது சிகாகோவில் நிதியியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவரிடம் ப்ளும்பெர்க் இதழ் தற்போதைய தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேட்டி கண்டுள்ளது. இதற்கு பதிலளித்த ரகுராம்ராஜன், வேலை வாய்ப்பின்மைதான் தற்போதைய மிகபெரிய பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ளார். வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இது 2017-18 ம் ஆண்டில் 6.1 % ஆக அதிகரித்துள்ளதாக தேசிய ஆய்வு மாதிரி அறிக்கையில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் 11 மில்லியன் மக்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஆண்டுதோறும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் தேவைப் படுகிறது. ஆனால் அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள ரகுராம்ராஜன், கட்டுமானத் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் மறைந்து கிடக்கின்றன என்றவர் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான கட்டுமானத் துறை சார்ந்த வணிகத்தின் அளவில் இருக்கிறது என்றவர் புதிது புதிதாக வீடுகளை கட்டுதல், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே கட்டமைப்பு பணிகளால் இந்தியாவில் கட்டுமானத் துறை வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இத்துறையின் வளர்ச்சிக்கு நியாயமாக மற்றும் எளிதாக நிலம் கையகப்படுத்த தீர்வுகளைக் காண வேண்டியது மிகவும் அவசியமானது” என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சட்டம், ஜி.எஸ்.டி, வங்கி திவால் சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன இருந்தாலும் தொழிலாளர் பிரச்சனைகளுக்கோ, நிலம் கையகப் படுத்துதல் போன்ற பிரச்சனைகளுக்கோ எந்த தீர்வும் கண்டு பிடிக்கப் படவில்லை. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் பிராந்திய மனித மேம்பாட்டு அறிக்கை மதிப்பீட்டின்படி 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறையில் ஈடுபட்டிருக்கும் அதிகப்படியான மக்கள் அதைவிட்டு வெளியேறி உற்பத்தித் துறைகளுக்கும், சேவைத் துறைகளுக்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏற்கெனவே இந்த துறைகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications