Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 லட்சம் பேரின் பிஎஃப் கணக்கில் எதிர்பாராத சர்ப்ரைஸ்! அரசு எடுத்துள்ள முடிவால் உங்கள் பணத்திற்கு என்னவாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎஃப் அமைப்பில் பணத்தை சேமித்து வருகிறார்கள். தற்போது தொழிலாளர் நல அமைச்சகம் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிஎப் கணக்கில் உள்ள பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

உண்மையில் 7 லட்சத்திற்கும் அதிகமான செயல் இழந்த பிஎப் கணக்குகளில் உள்ள ₹1000-க்கு குறைவான சிறிய தொகையை மட்டுமே, எந்தவித விண்ணப்பமும் இன்றி, சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது..

EPFO

இபிஎப்ஓ - பணப்பலன்

நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத, குறைந்த அளவு இருப்பு கொண்ட கணக்குகளை இபிஎப்ஓ அடையாளம் கண்டுள்ளது. சுமார் 7.16 லட்சம் கணக்குகள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன, இதில் தலா ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே பணம் உள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய காரணம், உரிமை கோரப்படாத பணத்தை அதன் உரியவர்களிடம் சேர்ப்பதே ஆகும். பல தொழிலாளர்கள் வேலை மாறும்போது பழைய பிஎப் கணக்கை அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் அந்த பணம் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இத்தகைய செயல் இழந்த கணக்குகளில் உள்ள பணத்தை பாதுகாப்பாக திரும்ப வழங்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

7 லட்சம் கணக்குகள்

இந்த நடைமுறைக்காக சந்தாதாரர்கள் எந்த ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை, எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்ல வேண்டியதுமில்லை.. ஆனால், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இபிஎப்ஓ பதிவில் சரியாக இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த தொகை தானாக வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்..

இந்த பணத்தை பெறுவதற்கான விதிமுறைகள் ரொம்பவே எளிமையானவை.. ஒரு பிஎப் கணக்கிற்கு தொடர்ச்சியாக 36 மாதங்கள் பங்களிப்பு வரவில்லை என்றால், அது செயலிழந்த கணக்காக வகைப்படுத்தப்படும்.. அத்தகைய கணக்குகளில் ₹1000-க்கு குறைவாக இருப்பு இருந்தால் மட்டுமே இந்த automatic பரிமாற்றத்திற்கு தகுதி இருக்கும்..

பிஎப் வைத்திருப்பவர்களுக்கு சர்ப்ரைஸ்

கணக்கு வைத்திருப்பவரின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இபிஎப்ஓ அமைப்பிடம் இருந்தால் மட்டுமே இந்த பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு வரும்.

இந்த நடவடிக்கையின் மிகப்பெரிய பலன் என்னவென்றால், தொழிலாளர்கள் தங்கள் பணத்தை பெற அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது... பழைய கணக்குகளில் உள்ள சிறு தொகையை திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருப்பதில்லை, ஆனால் இந்த நடவடிக்கை மூலம் அந்த பணம் நேரடியாக அவர்களின் பேங்க் அக்கவுண்ட்டுக்கே வந்து சேரும்...

ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் உயிரிழந்திருந்தால், நாமினி விவரங்கள் சரியாக பதிவாகி இருந்தால், அந்த தொகை அவர்களின் வாரிசுகள் அல்லது நாமினிகளுக்கு வழங்கப்படும்..

செயலிழந்த கணக்குகள்

இது தொழிலாளர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. செயல் இழந்த கணக்குகளை குறைக்கவும், நிதியை சுழற்சியில் வைத்திருக்கவும் இபிஎப்ஓ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சந்தாதாரர்கள் தங்களுடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரியாக இணைத்துள்ளதை உறுதி செய்துகொள்வது அவசியம். இதன் மூலம் இத்தகைய அரசு திட்டங்களின் பலன்களை எளிதாக பெற முடியும். மொத்தத்தில் இந்த புதிய செயல்முறை தொழிலாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்றே நம்பப்படுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+