கடலில் குளிக்க போறீங்களா? ரவுண்ட் ரவுண்டா ஒன்னு இருக்குமே! அதுதான் மோசமானது! சிக்கினா உயிர் போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலில் குளிக்க ஆசைப்படும் மக்கள் அதில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொள்ள வேண்டும் என உங்கள் மீனவன் மூக்கையூர் கிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். கடல் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்கரைக்கு சென்றாலே தண்ணீரில் நனைய வேண்டும், குளிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அத்தனை ஆனந்தமாக உணரும் நாம் அதில் இருக்கும் ஆபத்துகளை உணராமல் அரைகுறை நீச்சல் தெரிந்தாலும் திரில்லிங்கிற்காக சற்று தூரம் செல்வோம் என சொல்லி ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

Ungal Meenava Mookaiyur Kingston says about how dangerous it is to take baths in the sea

எனவே கடலில் குளிக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது பாதுகாப்பும் அவசியம் என்கிறார் உங்கள் மீனவன் மூக்கையூர் யூடியூப் சேனலின் கிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: பெரிய அலை வேகமாக வரும் போது நம்மை தள்ளிவிட்டுவிட்டு பின்னோக்கி செல்லும் போது நம்மையும் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்லும்.

நாம் எத்தனை பலமாக கால்களை ஊன்றி வைத்திருந்தாலும் அலைகள் நம்மை அடித்துச் சென்றால் அவ்வளவுதான். நம்மை ஆழத்திற்கு கொண்டு செல்லும் போது என்ன நடக்கும் என்றால், நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் கரையை நோக்கி வர முடியாது. ஏனென்றால் கடலுக்கு கொஞ்சம் தூரத்தில் சென்றால் நீரோட்டம் என்ற ஒன்று இருக்கும்.

அந்த நீரோட்டம் நம்மை இன்னும் ஆழத்திற்குத்தான் கொண்டு செல்லும். மிகவும் அனுபவம் மிக்க நீச்சல்காரர்கள் அந்த நீரோட்டத்தை எதிர்த்து நீச்சல் அடித்து கரைக்கு வந்துவிட்டார்கள். அனுபவம் இல்லாதவர்கள் நீந்த முயற்சித்தாலும் அவர்கள் பயத்திலேயே நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். அதனால்தான் அலைகள் வேகமாக இருக்கும் போது நாம் கடலில் இறங்கி குளிக்கவே கூடாது.

கடலில் அலைகள் அடிக்கும் போது அதிலிருந்து 4 வகையான சுழிகள் இருக்கும். அந்த சுழிகளில் சிக்கினால் நீச்சல் தெரிந்த ஆளாக இருந்தாலும் சுழி சுருட்டி இழுத்துக் கொண்டு கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லும். அந்த சுழியில் மாட்டினால் நீரில் போட்டு நம்மை அழுத்தும். தப்பவே முடியாது. பெரிய அலைகளுக்கு எல்லாம் பெரிய பெரிய சுழிகள் எல்லாம் வரும். சுழிக்குள் ஆட்களை அழுத்தி கொல்லும். இதுதான் கடலுக்குள் இருக்கும் ஆபத்து.

சுழிக்குள் சிக்கினால் அதை எதிர்த்து தப்பிக்க நினைக்கக் கூடாது. அந்த சுழி போகும் பாதையிலேயே போய் அதைவிட வேகமாக நீந்தி கரைக்கு வந்துவிட வேண்டும். ஓரமாக இருந்துதானே கடலில் குளிக்கிறோம். இந்த அலை என்ன செய்ய போகிறது என அலட்சியம் செய்யாதீர்கள். அதுதான் ஆபத்து. அது போல் காற்றை கணக்கு செய்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம்.

அதாவது தரை நோக்கி காற்று வரும் போது அலைகள் பெரியதாக இருக்கும். ஆனால் நிலத்திலிருந்து கடலுக்குள் காற்று போகும் போது கடல் அமைதியாக இருக்கும். அது போல் அமாவாசை, பவுர்ணமியின்போது கடல் சீற்றத்தின் போதும் குளிக்கக் கூடாது. அடி கடல் என்றால் ஆழம் பெரிது பெரிதாக அடிக்கும் இடத்தில் மிகவும் பக்கத்திலேயே ஆழம் இருக்கும்.

இந்த பெரிய அலைகள் சுருட்டி எடுக்கும் போது அந்த இடத்தில் பெரிய பள்ளம் விழும். எனவே அலை அதிகமாக இருக்கும் போது கடலில் குளிக்க வேண்டாம் என உங்கள் மீனவன் மூக்கையூர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+