அசத்தல் முதல்வர்.. ரூ.1000 வருதா? சென்னையில் உங்களுடன் ஸ்டாலின்.. இதோ இன்று 6 வார்டு குறிச்சுக்குங்க
சென்னை: சென்னையில் இன்று ஜூலை 17ம் தேதி, 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி, பொது மக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் விண்ணப்பித்து, மனுக்களை தந்து வரும் நிலையில், சென்னையிலும் இன்று முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி துவக்கி வைத்திருந்தார்.

முதல்வர் வேண்டுகோள்
அத்துடன், தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மறு கணமே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை பெறுவதற்கான பயிற்சி முகாம்கள் எந்தெந்த மாவட்டங்களில்? எங்கெல்லாம் நடக்கும்? என்ற விவரங்கள் வெளியானது.
சென்னையில் 6 இடங்கள்
அந்த வகையில், சென்னையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் 6 இடங்களில் நடைபெறுகிறது. இதில், சென்னையில் இன்று ஜூலை 17ம் தேதி, 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெற உளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிவிப்பில், "சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாதவரம் மண்டலம், 32-வது வார்டு, சூரப்பட்டு சந்திப்பு, அம்பத்தூர்- ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடைபெற உள்ளது.
ராயபுரம் மண்டலம், 49-வது வார்டு, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ.சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால், அம்பத்தூர் மண்டலம், 80-வது வார்டு, புதூர், கிழக்கு பானு நகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
மகளிர் உரிமைத் தொகை
மேலும், கோடம்பாக்கம் மண்டலம், 130-வது வார்டு, வடபழனி, 100 அடி சாலையில் உள்ள ஆர்த்தி மஹால், பெருங்குடி மண்டலம், பஞ்சாயத்து அலுவலகச் சாலையில் உள்ள 184-வது வார்டு அலுவலகம், சோழிங்கநல்லூர் மண்டலம், 192-வது வார்டில், நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளன.
இம்முகாம்கள் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்து முடிந்த முகாமில் பெரும்பாலும் மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கவே மக்கள் அதிகம் கூடியதை பார்க்க முடிந்துள்ளது.. இதற்கு அதற்கடுத்தபடியாக ரேஷன் கார்டு,, ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்தும், மனுக்களை வழங்கியும் செல்கிறார்கள்..
பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பெறப்படும். விண்ணப்பங்கள். மனுக்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications