சென்னையில் இன்று "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்! எங்கெல்லாம் நடக்குதுனு பாருங்கள்! உங்கள் ஏரியா இருக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அரசுச் சேவைகளை வழங்கும் ஒரு சிறப்பான முன்முயற்சியாகும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

mk stalin tamil nadu

முகாம்கள் நடைபெறும் இடங்கள்

மணலி மண்டலம்: மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி

தண்டையார்பேட்டை மண்டலம்: ஆர்.வி. நகர் குருமூர்த்தி பள்ளி

திரு.வி.க. நகர் மண்டலம்: சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடம்

தேனாம்பேட்டை மண்டலம்: சூசைபுரம் சர்ச் ஆஃப் செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர்

வளசரவாக்கம் மண்டலம்: மதுரவாயல் ஸ்ரீபாக்யலட்சுமி திருமண மண்டபம்

ஆலந்தூர் மண்டலம்: முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்ஷன், சமூக நலக் கூடம்

திட்டத்தின் நோக்கம் மற்றும் சேவைகள்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று சேவைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்த்து, அவர்களின் இருப்பிடத்திலேயே அரசுத் திட்டங்களை வழங்குவதாகும். பட்டா மாறுதல், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமான வரிச் சான்றிதழ், ரேஷன் அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குமான மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை முதல் கன்னியாகுமரி வரை 10,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 15 அன்று மட்டும் 1,400க்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளிலும், 2,100க்கும் மேற்பட்ட ஊரகப் பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வாரந்தோறும் திங்கள், சனி, ஞாயிறு நீங்கலாக மற்ற நான்கு நாட்களில் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

பல்துறை ஒருங்கிணைப்பு

இந்த முகாம் தொடங்கிய முதல் நாளிலேயே 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன; அவற்றில் 50,000 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கானவை. நகராட்சி நிர்வாகம், குடிநீர், வருவாய், மருத்துவம், எரிசக்தி, கூட்டுறவு, உணவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன், வீட்டு வசதி, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், சமூக நலன், மகளிர் உரிமைத் தொகை, தகவல் தொழில்நுட்பத் துறை, டிஜிட்டல் சேவை உள்ளிட்ட 13 அரசுத் துறைகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கான ஒப்புதலும் வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+