பரோட்டா கல்லில் வாக்கிங் போன மாஸ்டர்.. சிதம்பரத்தில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர் கண்ட அதிர்ச்சி
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பரோட்டா அடிக்கும் கல்லில் ஏறி ஊழியர் ஒருவர் நடந்து செல்வதும், அதை சுத்தம் செய்யாமல் உடனேயே மாஸ்டர் பரோட்டா தட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்து கடை உரிமையாளர் அந்த கல்லை சுத்தம் செய்யுமாறு, ஊழியரை அதட்ட, அவர் கடமைக்கு கீழே கிடந்த அழுக்குத்துணியை எடுத்து பரோட்டா கல்லை துடைக்கும் வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பொருளாக பரோட்டா உள்ளது. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆக்கிரமித்துள்ள உணவு பொருளாக பரோட்டா இருக்கிறது.

பரோட்டா கடை
அதிலும் பேச்சுலர்களின் இரவு உணவில் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் இடம் பெறும் உணவு பரோட்டாதான் என்றால் மிகையல்ல. சொல்லப்போனால் ஹோட்டலுக்குள் முதலில் அடியெடுத்து வைத்ததும் வாடிக்கையாளர்களை முதலில் வரவேற்பது பரோட்டக்களாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு பரோட்டோக்கள் மக்களின் உணவு பட்டியலில் பேவரைட் ஃபுட் ஆக இருக்கிறது.
அழுக்குத்துணியை எடுத்து
பொதுவாக ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமாற்றதாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுவது வழக்கம். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வெளியானாலும் கூட, முழுவதுமாக இது நின்ற பாடில்லை. இதை காட்டும் விதமாகத்தான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
அதாவது சிதம்பரம் நகரில் இயங்கி வரும் இயற்கை சைவ பரோட்டா செண்டர் என்ற உணவகத்தில் பரோட்டா அடிக்கும் கல்லில் ஏறி ஊழியர் ஒருவர் நடந்து சென்றதும், அதை சுத்தம் செய்யாமல் உடனேயே மாஸ்டர் பரோட்டா தட்டியதையும் வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். உடனே கடை உரிமையாளர் அந்த கல்லை சுத்தம் செய்யுமாறு, ஊழியரை அதட்டவே, அவர் கடமைக்கு கீழே கிடந்த அழுக்குத்துணியை எடுத்து பரோட்டா கல்லை துடைக்க்கிறார்.
நெட்டிசன்கள் கோரிக்கை
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற உணவகங்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு அதிகரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
உணவு சாப்பிட வருபவர்கள் இப்படி சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்படும் உணவை சாப்பிட்டால் என்ன மாதிரியான உடல் நல பிரச்சினைகள் வரும் என்பதை பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல் சில ஹோட்டல்கள் நடந்து கொள்வது வேதனை அளிப்பதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். சிலரோ, இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டால் உடனடியாக அந்த ஹோட்டலின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications