அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கல் வீச்சு! மூக்கு உடைந்ததால் பெண் அலறல்! பதறிப் போன நிர்வாகிகள்!

அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சியில் கல் வீச்சு சம்பவம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்வீச்சில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பெண் ஒருவரின் மூக்கை அந்தக் கல் பதம் பார்த்ததால் ரத்தம் சொட்ட சொட்ட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை சரிசெய்து நிகழ்ச்சியை தொடர வைத்தார் அமைச்சர் சேகர்பாபு.

ஸ்டாலின் பிறந்தநாள்

ஸ்டாலின் பிறந்தநாள்

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை 70 நாட்களுக்கு கொண்டாடும் வகையில் தினமும் ஒரு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு ஆளுமைகளை, பிரபலங்களை பேச அழைத்து வந்து ஸ்டாலினை புகழ வைக்கிறார். அந்த வகையில் சென்னை எழும்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன் உள்ளிட்டோரை சேகர்பாபு சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தார்.

மூக்கு உடைந்தது

மூக்கு உடைந்தது

அப்போது கூட்டத்தில் ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்த போது போது அடையாளம் தெரியாத நபர் வீசிய கல் ஒன்று அங்கு அமர்ந்திருந்த பெண் ஒருவரின் மூக்கை உடைத்தது. இதனால் ஏற்பட்ட வலியால் அந்தப் பெண் அலறித் துடித்தார். இதையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேடையிலிருந்து கீழே இறங்கிய அமைச்சர் சேகர்பாபு கல்வீச்சில் ஈடுபட்டது யார் என்ற விசாரணையை தொடங்கினார்.

 கூட்டத்தில் சலசலப்பு

கூட்டத்தில் சலசலப்பு

கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியதாலும், சலசலப்பு ஏற்பட்டதாலும் இந்த விவகாரத்தை காவல்துறை வசம் ஒப்படைத்துவிட்டு மேடையேறி கூட்டத்தை மீண்டு தொடரச் செய்தார். இதனிடையே கல்வீச்சு சம்பவத்தால் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திருநாவுக்கரசர் எம்.பி. கலகத்தில் அமர்ந்திருந்தார். மேடையில் காணப்பட்ட இறுக்கத்தை அமைச்சர் சேகர்பாபு கலகலப்பாக பேசி சரி செய்தார்.

கல்வீச்சு நிகழ்வு

கல்வீச்சு நிகழ்வு

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கல்வீச்சு நிகழ்வு நடந்திருப்பது சென்னை கிழக்கு மாவட்ட திமுகவில் பேசு பொருளாக உள்ளது. ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி சேகர்பாபு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+