Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உருளுதாம், சாயுதாம்.. சென்னை அசோக் நகர் பங்களாவில் இரவு நேர அமானுஷ்யம்! நம்ப முடியாத 58 நிமிட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் 18 வருஷத்துக்கு முன்பு ஒரு மிகக் கொடூரமான கொலை சம்பவம் நடந்தது.. ஆனால், அன்று நடந்த அந்த பயங்கரம், இன்று சமூக வலைதளங்களில் தேவையில்லாத வதந்திகளால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களும் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.. அது என்ன?

சென்னை அசோக் நகர் நடேசன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சரவணன். இவர் தமிழக கனிமவளத்துறையில் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

Chennai Ashok Nagar Bungalow Haunted House 58 Minutes Video 58

இவர் தனது மனைவி கஸ்தூரி மற்றும் இவர்களுடன் தங்கியிருந்த வீட்டு வேலைக்காரப் பெண் அன்பரசி ஆகியோருடன் அந்த பெரிய பங்களா வீட்டில் வசித்து வந்தார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் மிக நெருக்கமாக இருந்தவர் சரவணன்.. எனவே அந்தப் பகுதியில் அவர் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நபராகவே பார்க்கப்பட்டார்.

சென்னை அசோக்நகர் பங்களா

கடந்த 2018, நவம்பர் 21ம் தேதி, மேற்கண்ட 3 நபர்களுமே, நகை மற்றும் பணத்திற்காக மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வழக்கை முதலில் அசோக் நகர் போலீசார் விசாரித்தனர் பின்னர் அது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சரவணனின் கார் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் அந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தபோது போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை விடுவித்த நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் முதலிலிருந்து சிபிஐ அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது.

பங்களாவில் அமானுஷ்யம்

இதனால் அந்த பெரிய பங்களா வீடு கடந்த 18 ஆண்டுகளாகவே போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. சிபிஐ விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால் அந்த வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்காமல் அப்படியே பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

சரவணன் எம்ஜிஆருடன் இருக்கும் பழைய போட்டோக்கள், அவர் பயன்படுத்திய சொகுசு கார் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாகவே தூசு படிந்து அப்படியே கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் அந்த வீடு பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

உருளுதாம் சாயுதாம்

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சில இளைஞர்கள் அந்த பங்களாவிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து விடுகிறார்களாம்.. அங்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் பேய் நடமாட்டம் இருப்பதாகவும் சொல்லி, தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் ரீல்ஸ் செய்திகளாக வெளியிட்டுள்ளனர்.

மொத்தம் 3 வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். முதல் ரீல்ஸ் வீடியோ 1.11 நிமிடங்கள் ஓடுகிறது. 2வது ரீல்ஸ் வீடியோ 59 நிமிடங்களும், 3வது வீடியோ 58 நிமிடங்களும் ஓடுகிறது. அந்த வீடியோவில் 6 இளைஞர்கள், "நாங்கள் பேய் வீட்டிற்கு போகிறோம்" என்று பாட்டை பின்னணியில் ஒலிக்கவிட்டு காரில் போகிறார்கள்.. பேய் வீடு இருக்கும் இடத்தை கூறி கொண்டு வருகிறார்கள்..

சரவணன் பயன்படுத்திய 9090 பதிவு எண் கொண்ட காரில் இருந்து தங்களது வீடியோவை பதிவு செய்து வீடு முழுவதும் காட்டுகிறார்கள்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக பரவியதால் பொது மக்கள் மத்தியில் தேவையற்ற பயமும் மிகுந்த குழப்பமும் உருவானது. குறிப்பாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

சிபிஐ விசாரணை நடந்து வரும் ஒரு முக்கியமான இடத்திற்குள் இப்படி அத்துமீறி நுழைவது மிகப்பெரிய சட்ட விரோத செயலாகும்.

58 நிமிட வீடியோ

இளைஞர்களின் இந்த விளையாட்டு தனமான செயலால் கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவும் முக்கிய தடயங்கள் அழிய வாய்ப்பு இருப்பதாக போலீசார் கவலைப்படுகிறார்கள்.. இப்போது அந்த வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாராவது அத்துமீறி உள்ளே நுழைந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரு காலத்தில் செல்வாக்கோடு வாழ்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொல்லப்பட்ட அந்த சோகமான இடத்தை வெறும் சமூக வலைதள புகழுக்காக பேய் வீடு என்று சித்தரிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

வதந்திகளை பரப்புவோர் மற்றும் அத்துமீறி வீடியோ எடுத்த இளைஞர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்....!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+